அண்மைய செய்திகள்

recent
-

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி

 களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 


சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவராவார். 


பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவர் வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டுள்ளார். 


அந்த நேரத்தில் வைத்தியர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாகத் எச்சரித்துள்ளார். 


எனினும், மீண்டும் பரிசோதனை மேற்கொண்டபோது இரண்டாவது முறையும் அந்த வைத்தியருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 


சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைத்ததையடுத்து, பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 


எனினும், அவருக்குச் சிகிச்சை தேவைப்படுவதால் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


சந்தேக நபர் இன்றைய தினம் (15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 


களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் நாலக குணசேகரவின் ஆலோசனையின் பேரில், உப பொலிஸ் பரிசோதகர் வன்னியாரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி Reviewed by Vijithan on April 15, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.