அண்மைய செய்திகள்

recent
-

கனடாவுக்கு சட்டவிரோத பயணம் ; யாழ் இளைஞர்களை மீட்க முனைப்பு காட்டும் அதிகாரி

  கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்று எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார மேற்கொண்டு வருகிறார்.


யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இரண்டு இளைஞர்களையும் கிளிநொச்சியைச்சேர்ந்த ஒருவரையும் கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி அழைத்துச்சென்ற ஏஜென்சி எதியோப்பியாவில் வைத்து மேலதிகமாக 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை செய்ததுடன் காணொளி எடுத்து உறவினர்களுக்கும் அனுப்பியிருந்தனர்.



 30.000 டொலர் பணம் கேட்டு சித்திரவதை


சம்பந்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் காணொளியை பொலிசாரிடம் கையளித்ததையடுத்து.விசாரணைகளை மேற்கொண்ட வெளிநாட்டமைச்சு அதிகாரிகள் எதியோப்பியா சென்று எதியோப்பிய பொலிசாருடன் இணைந்து இளைஞர்கள் மூவரையும் மீட்டெடுத்திருந்தனர்.


தற்போது இவர்களுக்கெதிராக எதியோப்பிய உள்ளூர் மஜிஸ்திரேட் நீதிமன்றில் விசாரணைகளை நடைபெற்று வருகின்றன. வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார இவர்களை மீட்கும் பணியில் துரிதமாக செயற்பட்டு வருகிறார்.


இவர்களின் விசா முடிவடைந்த நிலையில் ஒரு நாளைக்கு 30 டொலர் வீதம் 500 டொலர் தண்டப்பணம் செலுத்த வேண்டுமென எதியோப்பிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்த போது தண்டப்பணத்தை 100 டொலராக குறைக்குமாறு எதியோப்பிய குடிவரவு அதிகாரிகளுடன் வாதாடி தண்டப்பணத்தை 100 டொலராக குறைத்துள்ளார்.


பாதிக்கப்பட்ட இளைஞர்களின் விடுதலைக்காக மூன்று தடவைகள் எதியோப்பியாவுக்கு விஜயம் மேற்கொண்ட துஷார வழக்கு விசாரணை முடிவடைவதற்கு சிறிது காலம் எடுக்குமெனவும். வழக்கு விசாரணை முடிவடைந்ததும் மூவரும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்களெனவும் தெரிவித்துள்ளார்.





கனடாவுக்கு சட்டவிரோத பயணம் ; யாழ் இளைஞர்களை மீட்க முனைப்பு காட்டும் அதிகாரி Reviewed by Vijithan on June 30, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.