அண்மைய செய்திகள்

recent
-

“கொக்கி குமார்” சுஜித்தின் மரணம் தொடர்பாக வெளிவந்த தகவல்

 “கொக்கி குமார்” சுஜித்தின் உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம்; இயற்கை மரணம் என அதிகாரப்பூர்வமாக உறுதி.

அண்மையில் TikTok பிரபலமாக இருந்து சமூகவிழிப்பு மற்றும் தமிழ் தேசிய விழிப்பு என காணொளிகளைத் தன் ஆழமான ⁩தேடல், கம்பீரக் குரல் என கவரும் வகையில் முகத்தைக் கறுப்புத் துணிகொண்டு மூடி யாரிந்த குரலோன் என்ற உலகத்தமிழர் பலரும் தேடும் வகையில் வெளிப்படுத்திய சுஜித் என்ற பிரான்ஸ் வாழ் இளைஞனின் உடல் பூங்கா ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணமென கூறப்பட்டாலும் இளைஞனான அவரது உடல் பூங்காவில் இருந்தமையால் சந்தேகத்தை ஏற்படுத்தியமையால் பிரேத பரிசோதனை மேற்கொள்ள கோரப்பட்டதையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. அப்பரிசோதனையில் அவரது மரணம் மாரடைப்பினால் ஏற்பட்ட இயற்கை மரணமென கூறப்பட்டுள்ளது.
ஒருவர் மரணமடைந்த பின்பு அவரைப்பற்றிய நல்ல விடயங்களைப் பாராட்டுவதும் அவரது இழப்பினை தாங்காது அவரது சமூக நற்குணங்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செய்வதை விடுத்து, இளையர் என்பதால் அவதூறுகளை பரப்புவதையும் வலைத்தளப்பயனுக்காகவென்றே தமக்குத்தெரியாம விடயங்களை பரப்பிவிடுவதுமாக எம்மவர்களில் பலர் நடந்து கொண்டதற்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளியிட்டுள்ளது.
மேலும் தமிழ்த்தேசிய பற்றாளனாக இருந்தார் என்பதற்காக சகோதர இனத்தவர்களும் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களும் கூட கேலியை வெளிப்படுத்தியதும் தமிழ்த்தேசியம் பேசினால் இப்படித்தான் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் அழிக்கப்படலாம் என்ற பய உணர்வைக்கூட சிலர் வெளிப்படுத்தியிருந்தனர்.
எது எப்படியோ மாரடைப்பு என்பது இன்றைய மனத் வாழ்க்கை முறையில் நாளை யாருக்கு எப்போது நிகழும் என்று கூற முடியாத ஒன்று.
பிரான்சில் அடிக்கும் வெப்ப அலையில் 1500 பேர் வரை இறந்துள்ளார்கள். அதில் உடல் வெப்பமாதல் மாரடைப்பு நீரிழப்பு போன்றவையே அதிக காரணங்களாக இருக்கிறது. இந்த மரணங்களில், குழந்தைகள், சிறுவர் இளையோர் முதியோர் என யாரும் வேறுபடவில்லை. அந்த வகையில் தமிழ்தேசிய உணர்வாளனாக இருந்து உலகெங்கும் பேசுபொருளாக தன்னை வெளிப்படுத்திய இந்த இளைஞன் கொக்கிகுமார் தன் வாழ்நாளில் தன் தமிழ்ச்சமூகத்துக்கு விழிப்புணர்வையூட்டும் பணியை செய்து மறைந்துள்ளார்.




“கொக்கி குமார்” சுஜித்தின் மரணம் தொடர்பாக வெளிவந்த தகவல் Reviewed by Vijithan on July 03, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.