மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தைப் பிளேடால் (Blade) அறுத்து உயிரை மாய்க்க முயற்சித்த இளைஞர் ஒருவர், படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று நண்பகல் 12.00 மணியளவில் குறித்த இளைஞர் தனது கழுத்தைப் பிளேடினால் அறுத்து உயிரை மாய்க்க முயற்சி முயற்சித்தபோது படுகாயமடைந்துள்ளார்.
இதனை அடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
July 07, 2026
Rating:


No comments:
Post a Comment