இலங்கையில் முதல்முறை தண்டவாளம் இன்றி பயணித்த புகையிரதம்!
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தண்டவாளம் இன்றி வீதி வழியாக பயணித்த புகையிரதம் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் முதன்முறையாக, ஜூலை 3, 2026 அன்று தண்டவாளங்கள் ஏதுமின்றி பிரதான பொது வீதி வழியாக புகையிரத எஞ்சின் (M5781) ஒன்று சவாலான முறையில் ஏற்றிச் செல்லப்பட்டது கண்டி - பேராதெனிய பகுதியில் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு இடம்பெற்றது.
பொது வீதியில் உள்ள பாலம் வழியாகவும், நாட்டின் மிக நீளமான மகாவலி கங்கை ஆற்றைக் கடந்து செல்லும் முதலாவது புகையிரத எஞ்சின் இதுவாகும் தண்டவாளப் பாதைகள் இல்லாததால், பிரத்யேக பாரவூர்திகள் (Trailers) மூலம் இந்த எஞ்சின் வீதி வழியாக நகர்த்தப்பட்டது.
Reviewed by Vijithan
on
July 04, 2026
Rating:


No comments:
Post a Comment