அண்மைய செய்திகள்

recent
-

வங்காலையில் கவின் கலைக்கூட கால்கோள் விழா-படங்கள் இணைப்பு

மன். புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தில் கவின் கலைக்கூடம் 27.06.2012 (புதன் கிழமை) மாலை 4.00 மணிக்கு  மங்களகரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் சந்தியோகு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மறைமாவட்ட சமூத் தொடர்பு அருட்பணி மைய இயக்குனரும் மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் கலந்துகொண்டார்.
விசேட அதிதியாக மன்னார் கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாட உதவிக் கல்பிப் பணிப்பாளர் திருமதி. பி. எம். எம். சில்வா அவர்களும், சிறப்பு அதிதியாக மன்னார் கல்வித் திணைக்களத்தின் சங்கீத பாட ஆசிரிய ஆலோசகர் திரு. விஸ்வமூர்த்தி  அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆபேல் றெவல் அவர்களும், வங்காலையின் மூத்த கலைஞர்களில் ஒருவராகிய திரு. வின்சன்ற் லெம்பேட் அவர்களும் கலந்துகொண்டனர்.
 இந்நிகழ்வின்போது கவின் கலைகளைப் பயிலவுள்ள மாணவர்கள் ஆசிரியர்களுக்கு குருதட்சனை கொடுத்து அவர்களை வணங்கினார்கள். புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கவின் கலைக்கூட இணைப்பாளராக சங்கீத ஆசிரியர் செல்வி அருள்மொழி அவர்கள் செயற்படுவார்.
நிகழ்வின் பிரதம அதிதி, அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார், கௌரவ அதிதி திருமதி பி. எம். எம். சில்வா, சிறப்பு அதிதி திரு. விஸ்வமூர்த்தி, திரு. ஆபேல் றெவல் ஆகியோர் மங்கள ஆரார்த்தி எடுத்து அழைத்துவரப்படுகின்றனர்.



தமிழ் நேசன் அடிகள் மங்கள விளக்கேற்றுகின்றார்.

பாடசாலை அதிபர் அருட்சகோதரர் சந்தியோகு உரைநிகழ்த்துகின்றார்.


வாழ்க்கைப் பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்படும் மனிதனுக்கு
 கலைகள் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றன
கவின்கலைக்கூட அங்குரார்ப்பண விழாவில்  தமிழ்நேசன் அடிகளார்

               மனிதனின் வயிறு பசித்ததுளூ தொழில்கள் பிறந்தன. மனிதனின் இதயம் பசித்ததுளூ கலைகள் பிறந்தன. மனிதன் தன் உணவுக்காக தொழில்களை உருவாக்கினான். மனிதன் தன் உணர்வுகளுக்காக கலைகளை உருவாக்கினான். பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்படும் மனிதனுக்கு கலைகள் புத்துணர்ச்சியையும், புத்தெழிச்சியையும் கொடுக்கின்றன. எனவே நம்மத்தியில் உள்ள கலைகளை வளர்ப்பதும், வளப்படுத்துவதும் காலத்தின் கட்டாயத் தேவையாகும் என மன்னார் மறைமாவட்ட சமூத் தொடர்பு அருட்பணி மைய இயக்குனரும் மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார். கடந்த 27.06.2012 (புதன் கிழமை) வங்காலை மன்ஃ புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தில் கவின் கலைக்கூட அங்குரார்;ப்பண விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
  கலைகள் மனித வாழ்வுக்கு இன்றியமையாதனவாகும். பல்வேறுபட்ட அழுத்தங்கள் மத்தியில் வாழும் மனிதனுக்கு கலைகள் மகிழ்;ச்சியை, அமைதியைக் கொடுக்கின்றன.
   மன்னார் மாவட்டத்திலே வங்காலைக் கிராமம் பல துறைகளில் மற்றக் கிராமங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. கல்வி, இறை அழைத்தல், கலைகள் என்று நாம் சொல்லிக்கொண்டே போகலாம். பாரம்பரியக் கலைகளில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பல கலைஞர்கள், புலவர்கள் வங்காலையில் வாழ்;ந்துள்ளனர். ஆனால் இன்று இந்தக் கலைப்பாரம்பரியம் மங்கிக்கொண்டு செல்வதை நாம் கவலையோடு கண்ணோக்கவேண்டி உள்ளது. இணையம், கைத்தெலைபேசி போன்ற நவீன தொடர்புசாதனங்களின் திடீர் வளர்ச்சியினால் இன்றைய இளைய சமுதாயத்தினர் கலைகளில் ஆர்வமற்று இருக்கின்றனர். இப்படியான ஒரு சூழ்நிலையில் இந்தக் கவின் கலைக்கூடம் காலத்தின் கட்டாயத் தேவையாகும். 
  கவின் கலைகளைக் கற்றுக்கொள்வதற்கு இலட்சிய தாகமும், மிகுந்த பொறுமையும், விடாமுயற்சியும் தேவை. ஆர்வமிகுதியானால் ஆரம்பத்தில் பலர் இக்கலைகளைப் பயில முன்வருவர். ஆனால் தொடர்ச்சியாகப் பயிற்சிசெய்வதில் ஆர்வம் குன்றும்போது இந்த வகுப்புக்களில் இருந்து விலகிச்செல்கின்ற நிலைமைகளைப் பார்க்கின்றோம். எனவே இக்கலைகளைப் பயில்கின்றவர்களுக்கு விடாமுயற்சியும் கடின உழைப்பும் இன்றியமையாத தேவைகளாகும்.
வங்காலையில் கவின் கலைக்கூட கால்கோள் விழா-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on June 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.