அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முஸ்லிம்கள் கலை இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர்- நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் நேசன் அடிகளார்

மன்னாரின் கலை இலக்கிய வளத்திற்கு பல்வேறு சமூகத்தினரும் பாங்கான பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இதிலே முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு விதந்துரைக்கப்படவேண்டியதாகும். பல்வேறு  மன்னார் முஸ்லிம்கள் கலை இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர்.  கிராமியக் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடுமிக்கவர்களாக காணப்பட்டுள்ளனர். 



இஸ்லாமிய சமூகத்தில் இருந்து கல்விமான்களையும், அரசியல் தலைவர்களையும் மன்னார் மண் தந்தது மட்டுமன்றி புலவர்கள், கவிஞர்கள். கலைஞர்கள் போன்றோரையும் தந்துள்ளது என மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனரும், மன்னா பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.

  கடந்த யூலை மாதம் 01அம் திகதி ஞாயிற்றுக்கிழமை (01.07.2012) கண்டி ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற ஆசிரியை திருமதி வஹீதா அவ்தாத் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் நேசன் அடிகளார் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
   'இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி' என்ற கொள்கை முழக்கத்தோடு வாழும் முஸ்லிம் பெருமக்கள் தமிழுக்கு தனித்துவமான பங்களிப்புகளைச் செய்துள்ளனர். ஈழத்தில் தமிழை வளர்த்த பெருமையில் முஸ்லிம்களுக்கு சமபங்கு இருக்கிறது.
  திருமதி வஹீதா அவ்தாத் அவர்கள் மன்னாரின் சிறந்த கலை இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு குடும்பத்தில் தோன்றியவர். மன்னாரைச் சேர்ந்த தமிழ் அறிஞரும் இலங்கையின் முதல் முஸ்லிம் வித்துவான் என்றும் அறியப்பட்டவருமான ஜனாப் எம். ஏ. அப்துல் றஹ்மான் அவர்களின் மகள்தான் திருமதி வஹீதா அவ்தாத். வித்துவான் றஹ்மான் அவர்களின் சகோதரர்கள்தான் நாடறிந்த நல்ல இலக்கியவாதி கலைவாதி கலீல் மற்றும் மன்னாரின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான மக்கள் காதர் ஆகியோர்.
  இத்தகைய கலை இலக்கியக் குடும்பத்தில் தோன்றிய மன்னார் மகளான வஹீதா எழுத்தாளராக, கவிஞராக, கலைஞராக விளங்குவதில் ஆச்சரியமில்லை. 2001ஆம் ஆண்டு 'பாலர் பாமாலை' என்ற பெயரில் ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு ஐந்து வரையிலான பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறுவருக்கான கவிதை இலக்கிய நூலை வெளிக்கொணர்ந்தார்.
  பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து இப்போது 'தந்தைக்கொரு தாலாட்டு' என்ற பெயரில் மரபுக் கவிதை நூல் ஒன்றை வெளிக்கொணர்கின்றார். இறையடி சேர்ந்த இவருடைய அருமைத் தந்தையார் வித்துவான் எம். ஏ. றஹ்மான் அவர்களின் நீங்காத நினைவாக வெளியிடப்படும் இந்நூலுக்கு 'தந்தைக்கொரு தாலாட்டு' என்ற சிறப்பான, பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
  தாய்தான் குழந்தைக்கு தாலாட்டுப் பாடுவாள். இங்கே மகள் ஒருத்தி நீங்காத் துயில்கொள்ளும் தன் தந்தைக்கு தாலாட்டுப் பாடுகின்றாள். இது வித்தியாசமான ஒன்றாக,  வியப்புமிக்கதாக இருந்தாலும் தந்தையின்பால் மகளுக்கிருக்கும் பற்றையும், பாசத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

கல்லூரியின் அதிபர் ஜனாப் எம். எஸ். மீராப் அவர்கள் தமிழ் நேசன் அடிகளாரிடம் நூலின் பிரதியைக் கையளிக்கின்றார்.


கல்ல}ரியின் அதிபர் மத்திய மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் எஸ். எம். எம். மர்ஜான் அவர்களுக்கு நூலைக் கையளிக்கின்றார்.

லை நிகழ்வின்போது நூலாசிரியரின் கவிதைப் பாடலை மாணவிகள் மேடையில் பாடுகின்றனர்.

நூலாசிரியர் கல்லூரியின் உதவி அதிபருக்கு நூலின் பிரதியைக் கையளிக்கின்றார். அருகில் இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் நிற்கின்றார்.

கடந்த யூலை மாதம் 01அம் திகதி ஞாயிற்றுக்கிழமை (01.07.2012) கண்டி ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற ஆசிரியை திருமதி வஹீதா அவ்தாத் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அருட்திரு தமிழ் நேசன் அடிளார் சிறப்புரையாற்றுகின்றார்




இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் முஸ்லிம்கள் கலை இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர்- நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் நேசன் அடிகளார் Reviewed by NEWMANNAR on July 10, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.