இ.போ.ச பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை
மன்னார், இ.போ.ச பணியாளர்கள் இருவரை கைது செய்தமையை கண்டித்து இ.அ.போசேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் பஸ் வண்டி ஒன்றின் நடத்துனரையும் சாரதியையும் மன்னார் அரச பஸ் வண்டி ஊழியர்கள் சிலர் தாக்கியதை தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்யக்கோரி மன்னார் தனியார் பேரூந்து சங்கத்தினர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
பணிப்பகிஷ்கரிப்பினைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்களில் இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்ட நிலையில் தமது பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டமையினைக் கண்டித்து இ.அ.போ. சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிமுதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேர அரச பஸ்கள்; சேவையில் ஈடுபடாததன் காரணத்தினால் பயணிகள் பெரும் அசெகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இதேவேளை, இன்று திங்கட்கிழமை காலை அரச பஸ் வண்டிகளில் பருவச்சீட்டுக்களை பயன்படுத்தி போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான மன்னார் தனியார் பஸ் வண்டி நடத்துனரும், சாரதியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
இ.போ.ச பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை
Reviewed by Admin
on
July 09, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment