அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம வீதி பழுதடைந்து போவதை தடுக்குமாறு கோரிக்கை.

மன்னார் பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியூடாக கனரக வாகனங்கள் அதிகளவில் போக்கு வரத்துச் சேவைகளை மேற்கொண்டுள்ளதன் காரணத்தினால் குறித்த வீதி தற்போது கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த வீதியூடாக அக்கிராம மக்கள் போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாவிலுப்பட்டான் குடியிருப்பு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

 மன்னார் பேசாலை வீதி - பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி தற்போது பாரிய அளவில் பாதிப்படைந்த நிலையில் மக்கள் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்ந்த மழைக்காலத்தின் போது குறித்த வீதி பாதிப்படைந்திருந்தது. தற்போது குறித்த வீதியூடாக கனரக டிப்பர் வாகனங்களின் மூலம் மணல் மண் ஏற்றிச் செல்லப்படுகின்றது.

 பாவிலுப்பட்டான் குடியிருப்பு ஊடாக மண் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டு அருகில் உள்ள கவையன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள காணியில் குறித்த மண் கொட்டப்பட்டு அங்கிருந்து மீண்டும் குறித்த மண் டிப்பர் வாகனங்களில் ஏற்றப்பட்டு எமது கிராம வீதியூடாக பேசாலை பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

 நாள் ஒன்றிற்கு 4 டிப்பர் வாகனங்கள் 4 தடவைக்கு மேல் குறித்த வீதியூடாக பயணிக்கின்றது. டக்டர் வண்டி மூலம் எமது வீதியூடாக மண் ஏற்றிச் செல்லுவதற்கு நாங்கள் தடையில்லை. ஆனால் கனரக டிப்பர் மூலம் எமது கிராம வீதியில் மண் ஏற்றப்படுவதை தாங்கள் கண்டிக்கின்றோம். எமது கிராம வீதியை திருத்தி தர இது வரை எவரும் முன் வரவில்லை.இவ்விடயம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திலும்,மன்னார் பிரதேச செயலாளர்,பிரதேச சபை தலைவர் உற்பட அனைவரிடமும் முறையிட்டும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

தற்போது குறித்த வீதியூடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்,வயோதிபர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே குறித்த வீதியூடாக மண் ஏற்றிச் செல்லுவதை தடுத்து நிறுத்துமாறு பாவிலுப்பட்டான் குடியிருப்பு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது
மன்னார் பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம வீதி பழுதடைந்து போவதை தடுக்குமாறு கோரிக்கை. Reviewed by NEWMANNAR on January 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.