அண்மைய செய்திகள்

recent
-

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தலைமன்னார் -புனித சதா சகாய மாதா ஆலயத்தை மீட்டுத்தரவும்- பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு செல்வம் எம்.பி கடிதம்.

தலைமன்னார் பியர் பகுதியில் அமைந்துள்ள புனித சதா சகாய மாதா ஆலயம் பல வருடங்களாக அப்பகுதியில் உள்ள கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமையினால் மக்கள் சுதந்திரமான முறையில் மத வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும்,உடனடியாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த ஆலயம் உடனடியாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


 இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் ,,,,,

 தலைமன்னார் பியர் பகுதியில் 1974 ஆம் ஆண்டளவில் புனித சதா சகாய மாதா ஆலயம் அமைக்கப்பட்டது.குறித்த ஆலயம் மிகவும் பழைமை வாய்ந்ததாக காணப்படுகின்றது.சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. தற்போது சுமார் 150 குடும்பங்கள் வரை குறித்த ஆலயத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்த காலம் முதல் தற்போது வரை குறித்த ஆலயம் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

 குறித்த ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் கடற்படையினரின் அனுமதியை பெற்று தேசிய அடையாள அட்டைகளை கடற்படையினரிடம் கொடுத்து விட்டே உள் செல்ல வேண்டும்.இதனால் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். யுத்தம் முடிவடைந்த நிலையில் அந்த மக்கள் நிம்மதியாகவும்,சுதந்திரமாகவும் மத வழிபாடுகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர்.

 எனவே கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தலைமன்னார் பியர் பகுதியில் அமைந்துள்ள புனித சதா சகாய மாதா ஆலயம் மீட்கப்பட்டு அந்த மக்கள் சுதந்திரமான முறையில் மத வழிபாடுகளில் ஈடுபட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தலைமன்னார் -புனித சதா சகாய மாதா ஆலயத்தை மீட்டுத்தரவும்- பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு செல்வம் எம்.பி கடிதம். Reviewed by NEWMANNAR on January 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.