அண்மைய செய்திகள்

recent
-

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற கட்டுரைப்போட்டியில் வங்காலை ஆனாள் ம.வி பாடசாலை மாணவி 1 ஆம் இடம்.

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அகில இலங்கை ரீதியில் மும்மொழிகளிலும் நடாத்திய கட்டுரைப்போட்டியில் ஆங்கிலப்பிரிவில் தோற்றிய மன்னார் வங்காலை புனித ஆனாள் ம.வி பாடசாலை மாணவி 1 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.


 18 வயதுக்குற்பட்ட பிரிவில் ஆங்கில மொழி மூலம் தோற்றிய மன்னார் வங்காலை புனித ஆனாள் ம.வி பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி செல்வி மரியான் புளோரன்ஸ் ஜொய்சி கூஞ்ஞ என்பவர் அகில இலங்கை ரீதியில் 1 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

 அதற்காண சான்றிதழ் மற்றும் பணப்பரிசை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தலைமைக்காரியலயத்தில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற கட்டுரைப்போட்டியில் வங்காலை ஆனாள் ம.வி பாடசாலை மாணவி 1 ஆம் இடம். Reviewed by NEWMANNAR on January 15, 2013 Rating: 5

1 comment:

Angelo said...

இப்பெரும் சாதனையை படைத்த மாணவிக்கு எனது பாராட்டுக்கள்.

மன்னார் மாவட்டம் கல்வி துறையில் மட்டுமில்லாது எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறது என்பதற்கு இந்த மாணவியின் வெற்றி ஒரு நல்ல உதாரணமாக விழங்குகிறது.

இந்த கால கட்டத்தில், மன்னார் மக்கள் இன்னும் விழிப்பாக உற்சாகத்துடன் தங்கள் சொந்த முன்னேற்றம் பற்றியும் மன்னார் மாவட்டம் சார்ந்த முன்னேற்றங்கள் பற்றியும் சிந்தித்து செயல் பட வேண்டும். சமய ரீதியாக மக்கள் வேற்றுமை பாராட்டாமல் சகோதரத்துவம் நிலவும்படி செயற்பட வேண்டும்.

அண்மைக்காலங்களில், தமிழர்கள் என்றும் இஸ்லாமியர்கள் என்றும் வேறுபட்டு சில செய்திகள் வெளிவருவது மிகவும் வேதனையாக இருக்கிறது. எமது மாவட்டத்தில் இந்துக்கள், கிறீஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்று மத அடிப்படையில் மக்கள் தங்கள் ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கையில்
வேறுபட்டிருப்பினும், தாய்மொழியாம் தமிழ் மூலம் சகோதரத்துவத்தை உணர்ந்து ஒன்றாக செயல்படுதல் நமது மாவட்ட முன்னேற்றத்துக்கும் நமது சொந்த முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக அமையும் என உறுதியாக நம்புகிறேன்.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.