அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்மொழி மூலமான கட்டுரைப்போட்டிகளில் சாதனை படைத்துவரும் மாணவன்


தேசிய பாதுகாப்பு தினத்தையிட்டு  அனர்த்த  முகாமைத்துவ நிலையம் நடாத்திய  அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூல கட்டுரைப் போட்டியில் மன்னார்  முசலி பண்டாரவெளியைச் சேர்ந்த பௌஸ்தீன் பமீஸ்  முதலிடம் பெற்றுள்ளார் . இவர் பதுளை  மாதம்பை இஸ்லாமிய அரபிக் கல்லூரி மாணவன் கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றார் .

இவர்   சர்வதேச அங்கீகாரத்தையொட்டி இடம்பெற்ற 19 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில்   வட மேல் மாகாணத்திலும்  மற்றும் சர்வதேச RIO மாநாடு  20வது நிறைவு    தினத்தையிட்டு  மத்திய சுற்றாடல் அதிகார சபை சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து 'நடாத்திய அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூல கட்டுரைப் போட்டியிலும்    முதலாம் இடங்களை  பெற்றுள்ளார் .
தேசிய பாதுகாப்பு தினத்தையிட்டு  அனர்த்த  முகாமைத்துவ நிலையம் நடாத்திய  அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூல கட்டுரைப் போட்டியில் இவருக்கான பரிசு மற்றும் சான்றிதழினை பதுளையில் இடம் பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட சபாநாயகர் சமல் ராஜ பக்ச ,அமைச்சர்களான மகிந்த அமரவீர,நிமல் சிறிபாலன்டீ சில்வா, முன்னிலையில் வழங்கி வைத்தார்;



சர்வதேச அங்கீகாரத்தையொட்டி இடம்பெற்ற 19 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற மாதம்பை இஸ்லாமிய அரபிக் கல்லூரி மாணவன் எம். எப். பமீஸ் தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் சான்றிதழ் பெறுவதை படத்தில் காணலாம்.
சர்வதேச RIO மாநாடு  20வது நிறைவு    ;தினத்தையிட்டு  மத்திய சுற்றாடல் அதிகார சபை சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து 'நடாத்திய அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூல கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம்பெற்ற  பௌஸ்தீன் பமீஸ் க்கு பரிசு மற்றும் சான்றிதழினை பத்தரமுல்லை தேசிய கலாபகத்தில் இடம் பெற்ற தேசிய RIO மாநாடு தின நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட் சுற்றாடல் அமைச்சர்களான ஆனுர பிரதசன யப்பா அவர்கள் வழங்கி வைத்தார்






குறிப்பு -

உங்கள்  பிள்ளைகளின் அல்லது உங்கள் பாடசாலை மாணவர்களின் சாதனைகள்  எமது மன்னார் இணையத்தில் பிரசுரிக்க விரும்பினால் அனுப்ப வேண்டிய  முகவரி -  newmannar@gmail.com




தமிழ்மொழி மூலமான கட்டுரைப்போட்டிகளில் சாதனை படைத்துவரும் மாணவன் Reviewed by NEWMANNAR on January 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.