அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் மன்னார் விஜயம்-வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி (படங்கள் )


மன்னாரில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஜேர்மன் அரசாங்கத்தின் நிவாரண உதவியினை இலங்கைக்கான தூதுவர் இன்று (24.01.2013) வழங்கி
வைத்திருக்கின்றார்.

சீரற்ற காலநிலையின் காரணமாக அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனத்தத்தினால் நாட்டிலுள்ள பெரும்பாலான மாவட்டங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தன.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட
பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்க
வைக்கப்பட்டிருந்தனர்.

மேற்படி வெள்ள அனர்த்தத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பிற்கு உள்ளான நிலையில் அவர்களின் ஜீவனோபாயத்தை சமாளிக்கும்  முகமாக உதவிகள் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது..


இந்நிலையில் மன்னார் சேவாலங்கா மன்றம் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதி உதவியுடன்
'றுர்ர்'அமைப்புடன் இணைந்து மடுக்கரை கிராமத்திற்கான உதவிகளை
மேற்கொண்டிருக்கின்றனர்.

மடுக்கரை கிராம அலுவலகர் பிரிவிற்கு உட்பட்ட சுமார் 400ற்கும் அதிகமான குடும்பங்களுக்கு உலர் உணவு தவிர்ந்த இதர உதவிப்பொருட்கள் இன்று (24.01.2013) வழங்கிவைக்கப்பட்டிருக்கின்றது.

ஜேர்மன் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கான புதிய தூதுவர் கலாநிதி
யூர்ரீன் மொர்காட் மன்னாரிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த
வேளையில் மேற்படி உதவிப்பொருட்களை அந்நாடடு அரசாங்கத்தினதும், மக்களினதும் சிறிய  அன்பளிப்பு என தெரிவித்து வழங்கி வைத்திருக்கின்றார்.

மடுக்கரை கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இடம்பெற்ற நிவாரணப்பொருட்கள்
கையளிக்கும் நிகழ்வில் றுர்ர் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி பாபரா
சிலி , நானாட்டான் பிரதேச செயலாளர் திரு.சி.ஏ.சந்திரய்யா,
சேவாலங்கா மன்றத்தின் வட பிராந்தியத்திற்கான விசேட திட்ட உதவிப்பணிப்பாளர்
திருமதி.அனற் றொய்ஷ், சேவாலங்கா மன்றத்தின் மன்னார் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு.சி.ஏ. குபேர குமார் மற்றும் அளவக்கை பங்குத்தந்தை அருட்திரு சுரேஸ் றெவ்வல் உட்படபொது மக்கள் பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.







(நமது  நிருபர் வினோத் )
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் மன்னார் விஜயம்-வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி (படங்கள் ) Reviewed by NEWMANNAR on January 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.