அண்மைய செய்திகள்

recent
-

கொலை செய்ய உத்தரவிட்ட மகள், காதலன் உட்பட 11 தரம் கற்கும் மாணவர்கள் நால்வர் கைது திடுக்கிடும் தகவல்கள்

மட்டக்களப்பு  செங்கலடி இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய 16 வயது மகள் மற்றும் காதலன் உட்பட நான்கு பாடசாலை மாணவர்களை பொலிஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர்.




கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு வர்த்தகரான சிவகுரு ரகு (48 வயது)அவரது மனைவி ரகு விப்ரா(41 வயது) ஆகிய இருவரும் செங்கலடி சந்தியில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.


இக் கொலை இடம்பெற்ற இடத்திற்குச் சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இக் கொலை தொடர்பாக விசாரணை நடாத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத் துறையினர் தேசிய புலனாய்வுத் துறையினர்,விசேட  புலனாய்வு சேவை பிரிவினர் அடங்கிய 40 பேர் கொண்ட விசேட விசாரணை குழு ஒன்றினை அமைத்து விசாரணையினை மேற்கொண்டனர்.


கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி.இந்திரன் ஆகியொரது வழிகாட்டலில் இடம்பெற்ற விசாரணையினைத் தொடர்ந்தே கொலையினைச் செய்வதற்கு சூத்திரதாரியாக இருந்து செய்வித்த கொலை செய்யப்பட்டசவர்களது மகள் அவரது காதலன் உட்பட 16 வயதுடைய செங்கலடியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் நான்கு பாடசாலை மாணவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்களது மகளான ரகு டக்சனா(16 வயது) பழைய ஊர் செங்கலடியைச் சேர்ந்த அவரது காதலன் பு.ஆஜேன்(16 வயது) மற்றும் இவரது நண்பர்களான கித்துள் கரடியனாற்றைச் சேர்ந்த கு.டிலக்சன்(16 வயது) சந்தை வீதி செங்கலடியைச் சேர்ந்த பு.சுமன்(16 வயது) ஆகிய நான்கு 11 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்குப் பயன்படுத்திய 3 கத்தி 2 பொல்லு மற்றம் கையுறை என்பனவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர்களது மகளான ர.டக்சனாவை பு.அஜேன் காதலிப்பதையிட்டு இவர்கள் கண்டித்த போது காதலன் செய்து காட்டுறன் வேலை பாருங்கள் என கூறிச்சென்றதாக தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்தே தொடர்ந்த விசாரணையினை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இக் கொலைக்குப் பின்னணியில் யாராவது உள்ளனரா என்பது குறித்தும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக் கொலை தொடர்பாக தெரியவருவதாவது கொலை செய்யப்பட்டவர்களது மகளே கொலையினைச் செய்ய உத்தரவிட்டுள்ளதுடன் சகல தகவல்களையும் வழங்கியுள்ளதாக பொலஸ் தகவல் தெரிவிக்கின்றது.

அதாவது கடந்த 7 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொலை செய்யப்பட்ட இருவரும் இரண்டு பிள்ளைகளும் மட்டக்களப்பிற்கு புதுவருடத்திற்காக உடுப்பு எடுக்கச் சென்ற போது மகளான டக்சனா தனது காதலனிடம் தாங்கள் உடுப்பு எடுக்கச் செல்வதாகவும் வீட்டுத் திறப்பு குறித்த இடத்தில் இருப்பதாகவும் அதனை எடுத்து சமையல் அறைக்குள் இருக்கும் கறிக்குள் நஞ்சு போடும் படியும் தெரிவித்துள்ளதாகவும் திட்டமிட்ட படி மயக்க மருந்து சாப்பாட்டிற்குள் போடப்பட்டுள்ளதாகவும் 7 மணிக்க வீடு திரும்பியவர்கள் சாப்பிட்ட போது கறி கசப்பதாக இருக்னகின்றது எனத் தெரிவித்து கறியினை சாப்பிடாத செய்தியை தொலை பேசி ஊடாக காதலனுக்கத் தெரிவித்ததுடன் நன்றாக நித்திரை கொண்ட போது அறிவிக்கிறேன் வந்து கொலை செய்யுங்கள் எனத் தெரிவித்ததுடன் அச் செய்தியினை மீண்டும் வழங்கியதனை அடுத்தே தனது காதலனும் அவரது இரண்டு நண்பர்களும் வந்த போது வீட்டில் உள்ள நாய் குலைத்த போது நாயை கட்டுப்படுத்தி கதவைத் திறந்த உள்ளே விட்டு வெட்டிக் கொலை செய்ய வைத்ததுடன் மீண்டும் அனுப்பியதாக அரம்பக் கட்ட விசாரணையினுடாகத் தெரிய வருவதாக பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது.



செங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம்! பாடசாலை நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும்!- பொதுமக்கள்!


மட்டக்களப்பு, செங்கலடியில் நடத்தப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவத்திற்கு செங்கலடி மத்திய கல்லூரி நிர்வாகத்தினரும் பொறுப்பேற்க வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனர்.
அண்மையில் செங்கலடியில் நடத்தப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவி ஒருவரும் மாணவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் ஒழுக்கம், மற்றும் முறையற்ற செயற்பாடு தொடர்பாக பாடசாலை நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர் பொதுமக்கள்.

அத்துடன்,  கடந்த பல வருடங்களாக செங்கலடி பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலையை பல்கலைக்கழகம் போல் நடத்தி வருவதாகவும் செங்கலடி மத்திய கல்லூரியில் பல ஒழுக்கக் கேடான நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட்டுவந்த போதும் அதனை இன்றுவரை பாடசாலை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என்பதோடு தவறு செய்யும் மாணவர்கள் தண்டிக்கப்படுவதும் இல்லை என்கின்றனர்.

இதனால் இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலையில் எதையும் செய்யலாம் என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் தவறுகளை தட்டிக்கேட்கும் ஆசிரியர்களுக்கு எதிராகவும் மாணவர்கள் செயற்பட்டுள்ளனர்.

இது குறித்து பல தடவைகள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உயர் கல்வி அதிகாரிகள் எனப் பலபேருக்கு புகார் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை பாடசாலை அதிபருக்கு சார்பான உயரதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் புகார் கூறியுள்ளனர்.

அத்துடன் செங்கலடி மத்திய கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் அண்மைக் காலமாக மிகவும் மோசமாகவுள்ளதுடன் பாடசாலையில் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் ஒழுக்கக்கேடான செயற்பாடுகளை தடுப்பதற்கோ தண்டிப்பதற்கோ பாடசாலை நிர்வாகம் முயற்சிக்கவில்லை என்பதுடன் பாடசாலையின் அதிபர் தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பாடசாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பல ஒழுக்கக்கேடான விடயங்களை மூடிமறைத்துள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் ஒரு சுதந்திரமான ஒழுக்கக்கேடான சூழ்நிலை செங்கலடி மத்திய கல்லூரியின் நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் சர்வ சாதாரணமாக கைத்தொலைபேசிகளை பாவிப்பதுடன் காதல் விவகாரங்களிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேற்படி செயற்பாடுகளின் பின்னணியிலேயே செங்கலடியில் அண்மையில் இடம்பெற்ற கொலையை அக் குடும்பத்தைச் சேர்ந்த செங்கலடி மத்திய கல்லுரி மாணவி ஒரே வகுப்பில் கல்வி பயிலும் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான சூழ்நிலைகளை பாடசாலை உருவாக்கியுள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

ஒரு கண்டிப்பான ஒழுக்கம் நிறைந்த சூழலில் கல்விகற்று வளர்த்தெடுக்கப்படும் மாணவர்கள் கடைசிவரை இவ்வாறான கொலைக்குற்றங்களுக்கு முயற்சிக்கமாட்டார்கள் என்பதுடன் இது போன்ற கொலைச்சம்பவம் இதுவரை இலங்கையில் நடக்கவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.

எனவே மேற்படி மாணவர்களின் கொலைக்குற்றத்திற்கு பாடசாலை நிர்வாகமும் பொறுப்பேற்று சம்மந்தப்பட்டவர்கள் படசாலையை விட்டு விலகவேண்டும் என்பதுடன், கல்வி அமைச்சு மேற்படி பாடசாலை மாணவர்கள் சம்பந்தமாகவும் பாடசாலை நிர்வாகம் சம்பந்தமாகவும் அதிக கவனம் செலுத்தி உடனடியாக ஒரு இறுக்கமான ஒழுக்கம் நிறைந்த சூழலில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


கொலை செய்ய உத்தரவிட்ட மகள், காதலன் உட்பட 11 தரம் கற்கும் மாணவர்கள் நால்வர் கைது திடுக்கிடும் தகவல்கள் Reviewed by NEWMANNAR on April 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.