அண்மைய செய்திகள்

recent
-

சவுதி மன்னர் அப்துல்லா காலமானார்

சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துலாசிஸ் (வயது 90) மரணமடைந்துள்ளார்.

அவர் நள்ளிரவு 1 மணியளவில் காலமானதாக அந்நாட்டின் அரச செய்தித் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

அப்துல்லா கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி செய்து வந்தவர்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் பதவியேற்பார் என்று அந்நாட்டு அரசவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மன்னர் அப்துல்லா பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில், அவரது சகோதரர் சல்மான் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

சவுதி மன்னரின் மறைவிற்கு அமெரிக்க அதிபர் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சவுதி மன்னர் அப்துல்லா காலமானார் Reviewed by NEWMANNAR on January 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.