அண்மைய செய்திகள்

recent
-

நேபாளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்


நேபாளத்தில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலநடுக்கம் எவ்வாறு உண்டாகிறது என்பதன் அடிப்படை காரணத்தை விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

உலகளவில் உயரமான மலையான இமயமலையின் அருகாமையில் நேபாளம் அமைந்துள்ளதே இந்த நிலநடுக்கத்திற்கு மிக முக்கிய காரணமாக அறியப்படுகிறது.

மத்திய ஆசிய பகுதியில் உள்ள இந்திய மற்றும் யுரேசிய தட்டுகள் (Indian tectonic plate and Eurasian tectonic plate) ஆகிய இரண்டு மாபெரும் தட்டுகள் ஒன்றுக்கொன்று பலமாக மோதிக்கொள்வதே நில அதிர்வுக்கு காரணமாகும்.

இந்த அதிர்வால் இமயமலையின் உயரம் ஆண்டுக்கு இரண்டு அங்குலம் வீதத்தில் வளர்ந்துக்கொண்டே செல்கிறது. இதை மனிதர்களால் உணரமுடியாது.

இந்த மோதலில் இமயமலை அடித்தளத்தில் உள்ள இந்திய அடித்தட்டு கீழ்நோக்கியும், யுரேசிய அடித்தட்டு மேல்நோக்கியும் நகர்வதால் பெரும் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இவையே பூகம்பமாக உருவெடுக்கிறது.

பிரித்தானியாவை சேர்ந்த புவியியல் ஆய்வாளரான David Rothery இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

இமயமலையில் உள்ள மலைகள் தொடர்ந்து இந்திய தட்டுகள்(Indian tectonic plate) மீது பலமாக மோதி வருகின்றன. இவற்றில், இரண்டுக்கும் மேற்பட்ட மோதல்கள் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

எவ்வளவு பெரிய நிலநடுக்கமாக இருந்தாலும் கூட, அதன் ஆரம்பம் சிறிய அளவு அதிர்வுகளை ஏற்படுத்தும். சில வினாடிகளுக்குள் இது விரிவாக பலத்த நில அதிர்வுகளை ஏற்படுத்தி பெரும் சேதங்களை ஏற்படுத்தும்.

ஆனால், புவித்தட்டின் மோதல் பலமானதாக இருந்திருந்தால், அதன் விளைவு இதைவிட மோசமானதாக இருந்திருக்கும். இந்த மோதல்கள் சில நேரங்களில் மெதுவாகவும், சில நேரங்களில் பலமாகவும் இருக்கும்.

தற்போது நேபாளத்தில் நிகழ்ந்துள்ள மோதல் மிகவும் மெதுவான மோதலாகும். அதன் விளைவு தான் தற்போது 3,200 உயிர்கள் பலியாகியுள்ளன என David Rothery தெரிவித்துள்ளார்.
நேபாளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம் Reviewed by NEWMANNAR on April 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.