அண்மைய செய்திகள்

recent
-

19ஐ காரணம் காட்டி பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு ஐ.தே.க. திட்டம்-நிமல் சிறி­பா­ல டி சில்வா


அர­சியல் அமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­வுடன் ஜன­நா­யகம் வென்­றெ­டுக்­கப்­பட்­ட­தாக கூறு­வது தவ­றா­னது. சுயா­தீன செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கடமை என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார். 19ஐ கார­ணம்­காட்டி பொதுத் தேர்­த­லுக்கு செல்ல ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிக்­கின்­றது . 20ஆவது திருத்தச் சட்டம் நிறை­வே­றாது பாரா­ளு­மன்­றத்தை கலைக்க விட­மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

 நிறை­வேற்­றப்­பட்­டுள்ள 19ஆவது திருத்தச் சட்டம் வர­வேற்­கத்­தக்க விட­யமே . அதி­காரப் பகிர்வு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பது நாட்டின் அர­சியல் கலா­சா­ரத்தை மீண்டும் பாது­காத்­துள்ள வகை­யிலே அமைந்­துள்­ளது. எனினும் 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வே­றி­ய­வுடன் அதை­மட்­டுமே கவ­னத்தில் கொண்டு செயற்­ப­டாது அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும் . ஜனா­தி­ப­திக்­கான அதி­கா­ரங்­களை குறைப்­ப­தனால் மட்­டுமே நாட்டில் ஜன­நா­யகம் ஏற்­படப் போவ­தில்லை. 

 சுயா­தீன சேவைகள் மற்றும் தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வதன் மூலமே முழு­மை­யான வெற்­றி­யாக மாற்­றி­ய­மைக்க முடியும். ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியும் அவர்­களின் ஆத­ரவுக் கட்­சி­களும் 19ஆவது திருத்­தத்தை மட்டும் நிறை­வேற்றி அத­னூ­டாக சுய­நல அர­சி­யலை செய்ய முயற்­சிக்­கின்­றனர். அதற்கு நாம் ஒரு­போதும் இடம் கொடுக்க மாட்டோம். ஐக்­கிய தேசியக் கட்சி நினைப்­பதைப் போல் இப்­போது பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­த­லுக்கு செல்லும் முயற்­சியை நாம் விரும்­ப­வில்லை. 19ஆவது திருத்தச் சட்டம் எவ்­வாறு நிறை­வேற்­றப்­பட்­டதோ அதேபோல் தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தும் 20ஆவது திருத்தச் சட்­டமும் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட வேண்டும். அது வரையில் நாம் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க அனு­ம­திக்க மாட்டோம். ஆரம்­பத்தில் நாம் 19ஆவது திரு­த்த சட்டமூலத்­தினைப் போல் 20ஆவது திருத்தச் சட்­டமூலத்­தி­னையும் ஒன்­றாக கொண்­டு­வர வேண்டும் என்ற கோரிக்­கை­க­்கமை­யவே செயற்­பட்டோம். ஆனால் ஜனா­தி­ப­தியின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­யவும் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் அவ­சி­யத்­திற்கு அமை­யவே நாம் 19 ஆவது திருத்தச் சட்­டத்தை ஆத­ரித்தோம். ஆனால் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறை­வேற்­றப்­படு­மென ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் எமக்கு வாக்­கு­றுதி கொடுத்­துள்­ளனர். 

அதற்­க­மைய கட்­டாயம் 20 ஆவது திருத்தச் சட்­டமூலத்தை நிறை­வேற்­றி­யாக வேண்டும். மேலும் சுயா­தீன செயற்­பா­டுகள் தொடர்­பிலும் எமக்கு சந்­தேகம் எழுந்­துள்­ளது. ஏனெனில் ஊடக அடக்­கு­மு­றைகள் தொடர்பில் 19 ஆவது திருத்­தச்­ சட்­ட மூலத்தில் சரத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டதைப் போல ஏனைய சுயா­தீன சேவை­க­ளிலும் சிக்­கல்­களை ஏற்படுத்தவும் இவர்கள் முயற்சிக்கலாம். அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திவிடக் கூடாது. எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை அரசாங்கமாக நாம் இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் வேலையை நாம் செய்தாக வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

19ஐ காரணம் காட்டி பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு ஐ.தே.க. திட்டம்-நிமல் சிறி­பா­ல டி சில்வா Reviewed by Author on May 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.