அண்மைய செய்திகள்

recent
-

தாய்மை அடைய உதவும் செவிப்­பன்னி...


குழந்­தை­யில்­லாத பெண்கள் தாய்­மை­ய­டை­வ­தற்கு உதவும் செவிப்­பன்­னி­யொன்றை பொறி­யி­ய­லா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர்.

யொனோ என அழைக்­கப்­படும் மேற்­படி செவிப்­பன்னி உப­க­ரணம் பெண்­களின் கரு­முட்டை வெளி­யேறும் சக்­க­ரத்தை கண்­காணித்து அவர்­க­ளு­டைய இன­வி­ருத்தி ஆற்றல் அதி­க­ரிக்கும் தரு­ணத்தை கணிப்­பிட உத­வு­கி­றது.

இந்த செவிப்­பன்னி உபகரணம் பெண்­களின் உடலின் வெப்­ப­நிலை கணிப்­பீ­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­ப­டு­கி­றது.

பெண்­களின் உடல் வெப்­ப­நிலை அவர்­க­ளது இன­வி­ருத்தி ஆற்றல் அதி­க­ரிக்கும் காலத்­திற்கு சில நாட்­க­ளுக்கு முன்­பாக சிறிது உயர்­வாக காணப்­ப­டு­வது வழ­மை­யாகும்.

யொனோ செவிப்­பன்னி உப­க­ரணம் ஒரு இர­வுக்கு 70 தட­வை­க­ளுக்கு மேல் என்ற ரீதியில் ஒரு­வ­ரது உடல் வெப்­ப­நி­லையைக் கணிப்­பி­டு­கி­றது.

பின்னர் புளூருத் தொழில்­நுட்பம் மூலம் தர­வு­களை யொனோ உப­க­ர­ணத்தின் பிர­யோக மென்­பொ­ரு­ளுக்கு அனுப்பி வைக்­கி­றது.

இதன் மூலம் அந்த உப­க­ரணம் இன­வி­ருத்தி ஆற்றல் தொடர்­பான கணிப்­பீட்டை மேற்­கொண்டு அது தொடர்­பான அறி­விப்பைச் செய்கிறது. இந்த உபகரணமானது அமெரிக்க ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வனேஸ்ஸா ஸி என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாய்மை அடைய உதவும் செவிப்­பன்னி... Reviewed by Author on August 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.