அண்மைய செய்திகள்

recent
-

பெண்களின் மூளை பல்திறனுடன் செயற்படுவதாக கண்டுபிடிப்பு...


ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை விரைவாகவும் பல்திறனுடன் செயற்படக்கூடியது எனவும் பென்சில்வேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த 949 பேரிடம் இது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு நுணுக்கமாக ஆராயப்பட்டது. ஒவ்வொருவரும் தொழிலில் ஈடுபடும்போது, பயணம் செய்யும்போது, நித்திரையின்போது என பல சந்தர்ப்பங்களில் எவ்வாறு இயங்குகிறார்கள், எதைச் சிந்திக்கிறார்கள் என்பவை கவனத்தில் கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில் பெண்களின் மூளை சிறப்பாக செயற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எப்போதோ சந்தித்தவர்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கும்போது மூளையின் இயக்கம் பெண்களுக்கே திறனாக இயங்குவதாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஆண்கள் ஒரு விடயத்தில் கவனம் எடுத்துச் செயற்படுகையில் மூளை சிறப்பாக இயங்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்திறனுடன் செயற்படும் வகையில் பெண்களின் மூளையே இயங்குகிறது.

உதாரணமாக நெரிசல் மிக்க நேரத்தில் குறைவான இடவசதியின்போது வாகனமொன்றை பின்னோக்கி செலுத்திவந்து சரியாக நிறுத்துவதற்கு மூளை பல்திறனுடன் செயற்பட வேண்டி ஏற்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பெண்கள் நிதானமாகவும் அதிக கவனத்துடன் செயற்படுவதற்கு மூளையின் இயக்கமே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags: மூளைபெண்கள்பல்திறன்பென்சில்வேனியா

பெண்களின் மூளை பல்திறனுடன் செயற்படுவதாக கண்டுபிடிப்பு... Reviewed by Author on August 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.