அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டிய ரெய்னா...



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இவர் கடந்த 2005ம் ஆண்டு யூலை 30ம் திகதி தம்முள்ளாவில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.

அந்த போட்டியில் டக்- அவுட் ஆக வெளியேறினாலும், அதன் பின்னர் தனது திறமையான ஆட்டத்தால் அணியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

நேற்று 10 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் பயணத்தை பூர்த்தி செய்த ரெய்னா, 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

28 வயதான சுரேஷ் ரெய்னா 218 ஒருநாள் போட்டியில், 5 சதம், 35 அரைசதம் உட்பட 5,500 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

அதே போல் 18 டெஸ்ட் (768 ஓட்டங்கள், ஒரு சதம்), 44 சர்வதேச டி20 (947 ஓட்டங்கள், ஒரு சதம்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

உலகக்கிண்ணம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ரெய்னா, டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 போட்டி ஆகிய 3 நிலைகளிலும் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டிய ரெய்னா... Reviewed by Author on August 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.