அண்மைய செய்திகள்

recent
-

ஜெர்மனியில் 65 வயது பெண் 4 குழந்தைகள் பெற்ற அதிசயம்...


பெர்லின் ஜெர்மனியில் உள்ள சாரா ஐகோர்ஸ்தி பகுதியை சேர்ந்த ஆனிகிரீட்ரவுனிக் என்ற 65 வயதான பெண்ணுக்கு இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ஆனிகிரீட் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார், அவரை ஸ்கேன் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதை அறிந்ததும் ஆனிகிரீட் ஆச்சரியம் அடைந்தார்.

அவர் போதிய உடல் நலத்துடன் இருந்ததால் 4 குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.
அவரை டாக்டர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கவனித்தனர். தேவையான மருந்து மாத்திரைகள், ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு வகைகளையும் சாப்பிட ஆலோசனை கூறினார்கள். இந்த நிலையில் குழந்தைகள் போதிய வளர்ச்சி அடைந்ததும் அவருக்கு சிசேரியன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி சிசேரியன் மூலம் 4 குழந்தைகளையும் ஆனிகிரீட் பெற்றெடுத்தார். ஒவ்வொரு குழந்தைகளும் 2¼ கிலோ எடை கொண்டதாக இருந்தன. பிறந்ததும் 2 குழந்தைகளுக்கு மூச்சு திணறல் இருந்தது. அந்த குழந்தைகள் வென்டிலேட்டர் உதவியுடன் குணப்படுத்தப்பட்டன. 2 குழந்தைகளுக்கு சர்ஜரி செய்யப்பட்டது. டாக்டர்கள் அதிக சிரத்தை எடுத்து இந்த சிசேரியன் சிகிச்சையை மேற்கொண்டனர்.

ஆனிகிரீக்குக்கு ஏற்கனவே 10 வயது முதல் 44 வயது வரையுள்ள பிள்ளைகள் உள்ளன. அவர்களில் சிலருக்கு திருமணமாகி 7 பேரக்குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் 65 வயது பெண் 4 குழந்தைகள் பெற்ற அதிசயம்... Reviewed by Author on September 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.