அண்மைய செய்திகள்

recent
-

மனிதக் கருவிலும் மரபணு மாற்றமா?


இயற்கைப் படைப்­பினை கூர்ந்து நோக்­கு­கையில் அது எத்­துணை அழ­கா­னது எனத் தெரி­ய­வரும். சூரிய சக்­தியை வேதிச் சக்­தி­யாக மாற்றி, தனக்கும் புவிவாழ் உயி­ரி­னங்­க­ளுக்கும் தரும் பணியைத் தாவ­ரங்கள் செய்­த­வா­றுள்­ளன.

தாவ­ரத்தின் ஒளித்­தொ­குப்­பிற்குத் தேவை­யான காப­னீ­ரொட்­சைட்டு வாயுவை உயி­ரி­னங்கள் தரு­கையில், ஒளித்­தொ­குப்பில் வெளி­யேறும் ஒட்­சிசன் உயி­ரி­னங்­களின் சுவா­சத்­திற்கு உத­வு­கின்­றன. நிலத்­தி­லி­ருந்து ஆவி­யாகும் நீர் மீண்டும் மழை­யாகப் பொழி­கின்­றது.

தாவ­ரத்­தி­லி­ருந்து கீழே விழும் சரு­குகள் படிப்­ப­டி­யாக உக்கி தாவ­ரத்­திற்கே பசளை ஆகின்­றன. தாவ­ரங்­களின் விதை மேற்­ப­ரப்பின் இனிமைப் பாகத்­தினை உண்ண விலங்­குகள் அதனை எடுத்துச் செல்­கின்­றன. அப்­பா­கத்­தினை உண்­ட­பின்னர் வேறி­டத்தில் அவ்­வி­தை­யினைப் போட்டுச் செல்­கின்­றன.

இது தாவர விதைகள் பரவ உத­வு­கின்­றன. இவ்­வா­றாக, இயற்­கையின் பிள்­ளைகள் தமக்­கி­டையே ஒரு­வ­ருக்­கொ­ருவர் உதவும் முறையே தனி அழகு.

இந்த இயற்கைச் சுற்­றாடல் மனி­தரால் இடையூறிற்கு உள்­ளா­கு­கையில் அதன் அழகும் சம­நி­லையும் குழப்­ப­ம­டை­கின்­றன.

உதா­ர­ண­மாக, பல்­ப­கு­தி­யத்­தினால் ஆக்­கப்­பட்ட உக்­கிப்­போ­காத அங்­காடிப் பைகள் அறி­வி­யலின் அதி­சயம் என முதலில் நோக்­கப்­பட்­டாலும், அவை அழி­யாது புவி­மேற்­ப­ரப்பில் தேங்கித் தரும் தொல்­லைகள் அதிகம். அறி­வியல் வழி­யாகப் பல நன்­மைகள் உண­ரப்­பட்­டாலும், தொலை­நோக்கு இல்­லாது கண்­டு­பி­டிக்­கப்­பட்ட படைப்­புக்­களால் தீமை­களும் விளை­கின்­றன. எனவே, சிற்­சில துறை­களில் ஆய்­வுகள் ஊடான மாற்றம் விளை­வித்­தல்­க­ளுக்குத் தடைகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

உயி­ரி­னங்­களின் இயல்­பு­களை பரம்­பரை பரம்­ப­ரை­யாக டி.என்.ஏ. மூலக்­கூ­றுகள் காவிச் செல்­லு­கின்­றன. அந்த உயி­ரி­னங்கள் இனம் பெருக்­கு­கையில், இரு எதிர்பால் உயி­ரி­னங்­களில் கிடைக்­கப்­பெறும் இனப்­பெ­ருக்­கத்­திற்குப் பொறுப்­பான கலங்கள் இணைந்து புதிய உயி­ரினம் உரு­வா­கின்­றது. ஆரம்­பத்தில் உரு­வாகும் உயி­ரினம் ஒரு கலம் கொண்­ட­தாகக் காணப்­படும். பின்­னரே கலப்­பி­ரிகை ஊடாகப் பல கலங்கள் பல்கிப் பெருக ஆரம்­பித்து, அதி­லுள்ள டி.என்.ஏ. இன் தக­வல்­க­ளுக்­கேற்ப உயி­ரி­னத்தின் உடல் உருவம் பெறும். உயி­ரினம் ஒரு கலம் கொண்­ட­தாக இருக்­கையில் அக்­க­லத்தின் டி.என்.ஏ. இல் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தினால், ஏற்­ப­டுத்­தப்­பட்ட மாற்­றத்­திற்கு அமை­வாக உயி­ரினம் உரு­வாக ஆரம்­பித்­து­விடும்.

ஏலவே தாவ­ரங்­களின் கலங்­களில் மர­பணு மாற்ற ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு அதன் அறு­வ­டைகள் வெளி­வர ஆரம்­பித்­து­விட்­டன. புதிய இயல்­புகள் கொண்ட தாவ­ரங்­களைத் தரும் மர­பணு மாற்­றப்­பட்ட விதை­யி­னங்கள் தற்­போது விற்­ப­னை­யா­கின்­றன.

விலங்­கு­க­ளிலும் மர­பணு மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு, முதன்­மு­தலில் ‘டோலி’ எனப் பெய­ரி­டப்­பட்ட ஆடு ஒன்று உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­பின்னர் வெவ்வேறு உயி­ரி­னங்­களும் மர­பணு மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தன. மின்­மினிப் பூச்­சியின் மர­ப­ணு­வினை தாவ­ரத்தின் மர­ப­ணுவில் புகுத்­து­வதன் ஊடாக ஒளிரும் தாவரம் போன்ற அதி­சயப் படைப்­புக்­களும் மர­பணு மாற்றல் தொழில்­நுட்­பத்­தி­னூ­டாக விளை­வாக்­கப்­பட்­டுள்­ளன.
இவ்­வா­றான ஆய்­வு­களை மனி­தனின் மர­ப­ணு­விலும் மேற்­கொள்ள ஆய்­வா­ளர்கள் ஆர்வம் கொண்­டி­ருந்­தாலும், அவ்­வா­றான ஆய்­வுகள் பல நாடு­களில் சட்­டத்­தினால் முற்­றாகத் தடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அண்­மையில் பிரித்­தா­னியா ஆய்­வாளர் என்­ப­வரால் மனிதக் கருவில் மர­பணு மாற்­றத்­தினை மேற்­கொள்­வ­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு விண்­ணப்­பித்­துள்ளார்.

கடந்த ஏப்­ரல் மாதத்தில் பிர­சு­ர­மான ஆய்வுக் கட்­டுரை ஒன்றில், சீனப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மனி­த­க­ருவில் மர­பணு மாற்றம் செய்­யப்­பட்­டமை தொடர்­பான விப­ரங்கள் வெளி­யாகி இருந்­தன. இது, ஏனைய நாடு­க­ளிலும் மனிதக் கரு­வி­லான மர­பணு மாற்றம் தொடர்­பான ஆய்­வுகள் அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும் என்ற அழுத்­தத்­திற்கு வழி­யேற்­ப­டுத்­தி­யுள்­ளது.
உயி­ரின இயல்­புகள் டி.என்.ஏ. வழியே கடத்­தப்­ப­டு­கையில் பரம்­பரை நோய்­க­ளுக்குக் கார­ண­மான பரம்­பரை அல­கு­களும் வாரிசைச் சென்­ற­டை­கின்­றன. இதனை, மர­பணு மாற்­றத்தின் வாயி­லாக அந்­நோய்கள் தொடர்­பான மர­ப­ணுக்­களை நீக்கி, நோயற்ற வாரிசை உரு­வாக்க முடியும் என ஆய்­வா­ளர்கள் நம்­பு­கின்­றனர். இதனை முன்­னி­றுத்­தியே ஆய்­வா­ளர்கள் தமது ஆய்­விற்கு அனு­மதி வழங்­கு­மாறு அழுத்தம் தரு­கின்­றனர்.

எனினும், மர­பணு மாற்­றங்கள் தொடர்­பான தொலை­நோக்குத் தீர்க்கதரிசனங்கள் உவப்பானவையாக இல்லை. அத்துடன், ஆய்வுகளில் ஏற்படும் தவறுகள் பரம்பரை பரம்பரையாக மனித குலத்தினை பாதிப்பதுடன், அவலட்சணமான மற்றும் பிறழ்வுகள் கொண்ட வாரிசுகள் உருவாகவும் வழிவகுத்துவிடக்கூடும். தொலைநோக்கற்ற அறிவியல் படைப்புக்கள் விளைவிக்கும் தீமைகளைக் கருத்திற்கொண்டு, மனித குலம் ‘குரங்கின் கை பூமாலை’ என்ற நிலைக்கு உள்ளாகிவிடக்கூடாது என்ற எண்ணங்களே எதிர்ப்புக் குரல்களாகப் பதிவு செய்யப்படுகின்றன.

மனிதக் கருவிலும் மரபணு மாற்றமா? Reviewed by Author on October 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.