அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உதயபுரம் கிராம மாணவி துஸ்பிரையோகம்-கண்டித்து கிராம மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்.(Photos & Videos)

மன்னார் உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை துஸ்பிரையோகத்திற்கு உள்ளாக்கிய பேசாலை கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி உதயபுரம் கிராம மக்கள் இன்று சனிக்கிழமை காலை 5 மணி முதல் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இன்று சனக்கிழமை காலை 5 மணிமுதல் 7 மணிவரை தலைமன்னாரில் இருந்து மன்னாருக்கான சகல வித போக்குவரத்துச் சேவைகளும் தடைப்பட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,,,,,

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவர் அயல் கிராமமான பேசாலை கிராமத்தில் தரம் 5ற்கான மாலை நேர வகுப்பிற்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சென்றுள்ளார்.

எனினும் ஆசிரியர் அங்கு இருக்கவில்லை.

இதன் போது அப்பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியை மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இடத்தில் இருந்து அழைத்துச் சென்று அருகில் இருந்த பாழடைந்த வீட்டில் வைத்து துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த இளைஞரிடம் இருந்து தாப்பிய குறித்த மாணவியான சிறுமி பேசாலை பகுதியில் உள்ள சிலரிடம் தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து உடனடியாக மாணவியின் பெற்றோரினூடாக பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

பேசாலை பொலிஸார் உடனடியாக குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.பாதீக்கப்பட்ட சிறுமி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த இளைஞனுக்கு எதிராக பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும், குறித்த சம்பவத்தை கண்டித்தும் உதயபுரம் கிராம மக்கள் இன்று சனிக்கிழமை (23) காலை 5 மணிமுதல் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாங்காலைபாடு சந்தியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதிக்கு குறுக்காக கட்டைகளை போட்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
-இதனால் காலை 5 மணிமுதல் 7 மணிவரை குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்தது.
இந்த நிலையில் பேசாலை பொலிஸார் மற்றும் மன்னார் பொலிஸார் ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்திற்கு வருகை தந்தனர்.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

நீண்ட நேரத்தின் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.

குறித்த சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,அவர் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதாகவும் விசாரனைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-மன்னார் நிருபர்-

(23-04-2016)








மன்னார் உதயபுரம் கிராம மாணவி துஸ்பிரையோகம்-கண்டித்து கிராம மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்.(Photos & Videos) Reviewed by NEWMANNAR on April 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.