அண்மைய செய்திகள்

recent
-

மாகாண சபையினை கைப்பற்றி பல்வேறு பட்ட அதிகாரங்களை எமது வசம் எடுப்பதற்காக பல்வேறு தியாகங்களை எமது தோழர்கள் மேற்கொண்டனர்-எஸ்.ஆர்.குமரேஸ்.

ஈழ விடுதலை போராட்டத்தின் போது ஆயுதம் ஏந்தி போராடிய அந்த போராட்ட இயக்கங்களில்,ஆயுதத்திற்கு அப்பால் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கின்றமையின் போது ஓர் அரசியல் ரீரோட்டங்களுக்கு அப்பால் போராளிகளை வழப்படுத்தி கொண்டு வந்ததில் முதன்மை வாய்ந்த இயக்கமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயற்பட்டு வந்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் தோழர் க.பத்மநாபா மற்றும் போராளிகளின்; 26 ஆவது நினைவு தினம் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(ஈ.பி.ஆர்.எல்.எப்) அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்...

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,,,,,

ஈழ விடுதலைப்போராட்டத்தின் மத்தியில் ஆயுதம் ஏந்திய ஏனைய போரளிகள் ஜனநாயக வழியில் வந்து அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த பெருமை இன்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் தோழர் க.பத்மநாபா அவர்களையே சேரூம்.
இந்த போராட்ட கால கட்டத்தில் தமிழ் மக்களுக்காக ஒரு அரசியல் ரீதியாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஜனநாயக நீதியாக வந்து அதன் பின் உறுவாக்கப்பட்டது தான் வட கிழக்கு இணைந்த மாகாண சபை.

அந்த மாகாண சபையினை பெறுப்பேற்கும் போது பல்வேறு பட்ட தியாகங்களை அர்ப்பனிப்புக்களை செய்து இந்த மாகாண சபையினை தோழர்; பத்மநாபா அவர்கள் வழி நடத்தி வந்தார்.

அன்று வட கிழக்கு இணைக்கப்பட்ட மாகாண சபையாக குறைந்த பட்சம் பொலிஸ், காணி அதிகாரம் குறைந்த ஒரு மாகாண சபையாக அன்று இருந்தது.

ஆனால் இன்று இருக்கக்கூடிய மாகாண சபை என்பது வடகிழக்கு பிரிக்கப்பட்டு காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் அற்ற மாகாண சபையாக இருக்கின்றது.

அந்த மாகாண சபையினை கைப்பற்றி பல்வேறு பட்ட அதிகாரங்களை எமது வசம் எடுப்பதற்காக பல்வேறு தியாகங்களை எமது தோழர்கள் மேற்கொண்டனர்.அன்று முதல் இன்று வரை எமது உரிமைகளை பெற்றுக் கொள்ளுவதற்காக பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வருகின்றோம்.

-ஆனால் இன்று வட கிழக்கு பிரிக்கப்பட்டுள்ள இந்த மாகாண சபையில் அதிகாரங்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் இன்னுமோர் பக்கமாக இன்று வரை வடமாகாண சபையில் இருக்கக்கூடிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் குறிப்பாக அதில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் கூடி இன்று நாங்கள் மாகாண சபைக்கு அதிகாரங்களை கேட்டுக்கொண்டு குறிப்பாக முதலமைச்சர் உற்பட நாம் மத்திய அரசாங்கத்திடம் போராடிக்கொண்டிருக்கும் இந்த நிலையில் ஓர் தூர நோக்குடன் எங்களிடம் இருக்கின்ற ஓர் குறைந்த பட்ட அதிகாரத்தைக்கூட மத்திய அரசாங்கத்திற்கு தாரை வார்க்கின்ற சில நிகழ்ச்சி நிறல்களின் எமது அமைச்சர்கள் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

-குறிப்பாக வடமாகாணத்தின் சுகாதார அமைச்சர் இன்று வவுனியாவில் மாகாண சபைக்கூறிய விவசாய காணியை மத்திய அரசாங்கத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

பொருளாதார மத்திய நிலையம் என்பது மத்திய அரசாங்கத்தோடு சம்மந்தப்பட்டதாக காணப்படுகின்றது.மகாண சபைக்கூறிய காணிக்குள் அதனை அமைக்கும் போது குறித்த காணியையும் சேர்த்து மத்திய அரசாங்கம் அபகரப்பு செய்யும் என்பது புறியாது மத்திய அரசாங்கத்திற்கு பல்வேறுபட்ட இடங்களில் காணிகள் இருக்கின்ற நிலையில் மாகாண சபை காணி அதிகாரம் தேவை என போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில் எங்களிடம் இருக்கின்ற காணிகளைக்கூட மத்திய அரசாங்கத்திற்கு கொடுக்கின்ற ஒரு தூர நோக்கற்ற செயற்பாடுகளுடன் எமது அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் சிந்தனைகள் மாற வேண்டும்.மக்களின் நலன்களில் இருந்து முடிவெடுக்க வேண்டும்.

-தோழர் பத்மநாபாவாக இருந்தாலும் சரி,தோழர் சிறிசபாரத்தினமாக இருந்தாலும் சரி,அல்லது உமா மகேஸ்வரனாக இருந்தாலும் சரி,தேசியத்தலைவர் பிரபாகரனாக இருந்தாலும் சரி மக்கள் அவர்களுக்கு செலுத்துகின்ற அஞ்சலிகள் என்பது எங்களுடைய மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு மக்களின் நலன்களில் இருந்து முடிவுகள் எடுக்க வேண்டும்.

எந்த மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் இரத்தம் சிந்தினார்கலே அந்த சிந்தனைகளை நிலை நாட்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அனைத்து மக்கள் பிரதி நிதிகளும் ஒன்று பட்டு செயல் படுவதன் மூலம் அவர்களின் கனவுகளை நினைவாக்க முடியும்.அதன் மூலமே நாம் அவர்களுக்கு செலுத்துகின்ற உயர்ந்த அஞ்சலியாக கருத முடியும்.அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாக இருக்கின்றது.என மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-

(20-06-2016)

மாகாண சபையினை கைப்பற்றி பல்வேறு பட்ட அதிகாரங்களை எமது வசம் எடுப்பதற்காக பல்வேறு தியாகங்களை எமது தோழர்கள் மேற்கொண்டனர்-எஸ்.ஆர்.குமரேஸ். Reviewed by NEWMANNAR on June 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.