அண்மைய செய்திகள்

recent
-

பள்ளிமுனை கிராமத்தில் காணி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கண்டன ஊர்வலம்-Photos

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் ஆலய சுரூபம் அமைந்துள்ள காணியினை ஒரு குடும்பத்திற்கு வழங்கியமை மற்றும் பள்ளிமுனை கிராமத்தைச் சேராக குடும்பம் ஒன்றிற்கு காணி வழங்கியமை ஆகியவற்றை கண்டித்து பள்ளிமுனை கிராம மக்கள் இன்று(20) திங்கட்கிழமை காலை கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டுள்ளதோடு,மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமாரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் ஆலய சுரூபம் அமைந்துள்ள 8 பேர்ச் காணியினை அக்கிராமத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு மன்னார் பிரதேசச் செயலாளர் வழங்கியுள்ளார்.குறித்த காணியில் ஆலய சுரூபம் அமைந்துள்ளமை தெரிந்த நிலையில் பிரதேசச் செயலாளர் குறித்த காணியை குடும்பம் ஒன்றிற்கு வழங்கியுள்ளதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பள்ளிமுனை கிழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணி இல்லாதவர்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்பட்டது.100 காணித்துண்டுகள் அளந்து எடுக்கப்பட்ட நிலையில் 96 நபர்களுடைய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டது.

ஆனால் பெயர் பட்டியலில் இல்லாத, பள்ளிமுனைக்கிராமத்தைச் சேராத குடும்பம் ஒன்றிற்கு காணி வழங்கப்பட்டுள்ளது.குறித்த காணியில் தற்போது கொட்டில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் காணி இல்லாத நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் தெரிவு செய்யப்படாத,பள்ளிமுனைக்கிராமத்தைச் சேராத குடும்பம் ஒன்றிற்கு காணி வழங்கப்பட்டமையினை குறித்த கிராம மக்கள் கண்டித்துள்ளனர்.

இன்று திங்கடக்pழமை காலை 9.30 மணியளவில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான பள்ளிமுனை மக்கள் தமது கிராமத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் பிரதேச செயலகம் வரை சென்றனர்.

பின் பள்ளிமுனை கிராம மக்களின் பிரதி நிதிகள் சிலர் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் அவர்களுடன் குறித்த பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு,தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்ததோடு,குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் பள்ளிமுனை கிராம மக்கள் சார்பாக கோரிக்கையினை முன் வைத்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேசச் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.


மன்னார் நிருபர்

(20-06-2016)






பள்ளிமுனை கிராமத்தில் காணி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கண்டன ஊர்வலம்-Photos Reviewed by NEWMANNAR on June 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.