அண்மைய செய்திகள்

recent
-

நாம் எல்லாவற்றையும் இழந்தோம்- ஆனால் கல்வி ஒன்ரே கைகொடுக்கின்றது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

கல்விக்கான ஒரு இராஜாங்க அமைச்சராக தமிழர் ஒருவர் எமக்கு கிடைத்தது எமக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது.அவர் கல்விக்காக ஆற்றுகின்ற சேவை இன்று எமது அமைச்சர் என்ற வகையில் தலை நிமிர்ந்து பேச வைக்கின்ற தன்மையினை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்-சித்திவிநாயகர் இந்து தேசியபாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுற்ப ஆய்வு கூடம் இன்று வெள்ளிக்கிழமை(17) கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,

-மன்னார் மாவட்டம் குறிப்பாக வன்னி மாவட்டம் கல்வி ஒன்றில் தான் பல துன்பங்களின் மத்தியிலே முளைத்து வளர்ந்து செயற்பட்டு வந்தது.

-அதற்கு காரணமாக இருந்தவர்கள் எமது வலயக்கல்விப்பணிமனை மற்றும் எமது ஆசிரியர் பெருந்தொகைகள்.போர்க்காலத்தில் கூட அவர்கள் துப்பாக்கி ஏந்தவில்லை.

கடமையின் நிமிர்த்தம் தமக்கு பணிக்கப்பட்ட பாடசாலைகளுக்குச் சென்று தமது குடும்பத்தை மறந்து கடமைக்குச் சென்ற எங்களுடைய ஆசிரியர்கள்,வலயக்கல்விப் பணிமனை உத்தியோகஸ்தர்கள் துப்பாக்கி ரவைகளுக்கு பலியானர்கள்.

அவர்களுடைய அந்த பொது நோக்கு மனற்பான்மை என்பது இன்று எமது மாவட்டத்தில் கல்வியினை ஒரு அளவிற்கு உயர்த்தியுள்ள நிலை காணப்படுகின்றது.

எல்லா வற்றையும் நாங்கள் இழந்தோம்.ஆனால் கல்வி ஒன்று தான் எங்களுக்கு கை கொடுக்கின்ற ஒரு சொத்தாக காணப்படுகின்றது.

இன்றைக்கும் எங்களுடைய ஆசிரியர்கள் தமது குடும்பத்தை,தமது பிள்ளைகளை , உறவுகளை மனதில் கொண்டாலும் கிடைக்கப்பெற்ற பாடசாலைகளுக்குச் சென்று தமது பணியினை திறமையாக மேற்கொள்ளுகின்றனர்.

வெளி மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கு நாங்கள் என்றைக்கும் தலை வணங்குபவர்களாக இருப்போம்.ஏன் என்றால் இன்றைக்கு இந்த ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சி , கல்விப்பணிமனை மேற்கொண்ட ஆர்வம் இன்றைக்கு மன்னார் மாவட்டத்திலே நல்ல பெறுபேற்றைக் கொடுத்துள்ளது.

எனினும் எமது பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை காணப்படுகின்றது.குறித்த வளப்பற்றாக்குறை தீர்க்கப்படுமாக இருந்தால் நாங்கள் யாழ் மாவட்டத்திற்கு இணையாக வன்னி மாவட்டம் திகழும் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.

-எனவே கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்களின் காலத்திலே அவரை நாம் பயண்படுத்தி எங்களுடைய பாடசாலைகளின் வழங்களை பெற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தை நாங்கள் ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதன் மூலமே சிறந்த பலனை பெற்றுக்கொள்ள முடியும்.எனவே எங்களுக்கு கிடைத்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்னன் அவர்கள் எங்களுக்கு ஒரு சிறந்த கௌரவத்தை கொடுத்துள்ளார்.

அவர் ஒரு தமிழனாக இருக்கின்றார்.எனவே போரால் பாதீக்கப்பட்ட எமது பிரதேசங்களிலே அவருடைய தரிசனம் இருக்க வேண்டும்.அங்கு அவர் தனது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன்.

எங்களுக்கு ஒரு உறவுப்பாலமாக அமைச்சர் செயற்பட்டு வருகின்றார்.அவரை நாம் சிறந்த முறையில் பயண்படுத்த வேண்டும். அந்த வகையில் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சான்றாக மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை திகழ்ந்து வரும் நிலையில் அதற்கு அப்பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் இப்பாடசாலையின் சமூகம் காரணமாக உள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.


-மன்னார் நிருபர்-
(17-06-2016)

நாம் எல்லாவற்றையும் இழந்தோம்- ஆனால் கல்வி ஒன்ரே கைகொடுக்கின்றது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. Reviewed by NEWMANNAR on June 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.