அண்மைய செய்திகள்

recent
-

எச்ஐவி பாதிப்பே ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்கு காரணம்? அதிர வைத்த விக்கிலீக்ஸ் ஆவணங்கள்....


ஐந்து வருடங்களுக்கு முன்னர் இறந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் எச்.ஐ.வீ எய்ட்ஸ் பாதிப்பால் தான் இறந்தார் என Wikileaks தற்போது கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இன்று உலகளவில் ஆப்பிள் தயாரிப்பு பொருட்கள் கொடி கட்டி பறக்க காரணமாக இருந்தவர் இவர் தான்.

இவர் கடந்த 2011 ஆம் வருடம் அக்டோபர் 5ஆம் திகதி தனது 56வது வயதில் காலமானார். தொழில் நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய அவரின் மறைவுக்கு உலகமே வருந்தியது.

அவர் இறப்பிற்கு காரணம் கணைய புற்று நோய் என கூகுள் நிறுவனன் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் பல புதைந்த ரகசியங்களை உலகுக்கு கொண்டு வரும் நிறுவனமான Wikileaksஇன் தலைவர் ஜூலியன் அசான்ஜ் இதை மறுத்துள்ளார்.

மேலும் Wikileaks 2004ஆம் ஆண்டு அவர் எச்.ஐ.வி டெஸ்ட் மேற்கொண்டார் என்பதற்கான ஆதார மருத்துவ சான்றிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது பொய்யான அறிக்கை ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்தது கணைய புற்று நோயால் தான் பலர் கூறியுள்ளனர். மேலும் ஸ்டீவ் ஜாப் மேல் நல்ல மதிப்பை கொண்டுள்ள அவரின் ஆதரவாளர்கள் சமுதாயத்தில் மிக பெரிய அந்தஸ்த்தில் உள்ள மனிதரை பற்றிய ரகசியங்களை கூறுவது கண்டனத்துக்குறியது என கூறியுள்ளனர்.

எது உண்மையே பொய்யோ, ஆனால் அவரின் சாதனைகளும் அவர் இந்த உலகுக்கு கூறிய வார்த்தைகளும் என்றுமே பொக்கிஷமாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.


எச்ஐவி பாதிப்பே ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்கு காரணம்? அதிர வைத்த விக்கிலீக்ஸ் ஆவணங்கள்.... Reviewed by Author on October 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.