அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாணம் மீது பாரபட்சம்...! சபையில் வெளுத்து வாங்கிய கூட்டமைப்பு....


2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது அரசியல் இருப்புக்களை தக்கவைத்து கொள்ளும் நோக்கில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 30 ஆண்டு காலம் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி பங்கீடு போதுமானதல்ல.

எனவே, இதற்கு தீர்வாக மொத்த தேசத்தை கட்டியெழுப்பும் வரிகளின் பங்கீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது வடமாகாணத்தை விஷேட தேவையுடைய மாகாணமாக கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தில் பல கைத்தொழில்கள் வளர்ச்சியடைந்திருந்தது. அதனை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

எனினும், தற்போது கைத்தொழில்கள் எதுவுமற்று, தெற்கிலிருந்து நுகர்வு செய்யும் மாகாணமாக வடமாகாணம் மாறியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணம் மீது பாரபட்சம்...! சபையில் வெளுத்து வாங்கிய கூட்டமைப்பு.... Reviewed by Author on November 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.