அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது வைத்தியசாலை நோயாளர் விடுதிகளுக்கு செல்லும் பாதையோரங்களில் மலசல கூட கழிவுகள் வெளியேற்றம்-மக்கள் விசனம்- 📷

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் காணப்படுகின்ற அதிகலவான மலசலகூடங்கள் மனிதர்கள் பாவிக்க முடியாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக நோயளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி 4 அமைந்துள்ள பகுதியில் உள்ள மலசலக்கூடங்களில் உள்ள மனிதக்கழிவுகள் நோயாளர் விடுதிக்கு வெளியே பாதையோரங்களில் தேங்கி கிடப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இதனால் அப்பகுதியூடாக நோயாளர் விடுதிக்கு செல்வதில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நோயாளர் விடுதிகளில் காணப்படுகின்ற மலசல கூடங்கள் உரிய பராமறிப்பு இன்றி காணப்படுவதாகவும்,மனிதக்கழிவு கள் மலசல கூடத்தினூடாக வழிந்தோடுவதாகவும்,இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பாக நோயாளர்களும்,மக்களும் மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகத்திடமும்,அதிகாரிகளிடமு ம் பல தடவைகள் தெரிவித்தும் உரிய நடவடிக்கைகளை இது வரை மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அதிகமான துப்பரவு பணியாளர்கள் கடமையாற்றுகின்ற வைத்தியசாலையாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை காணப்படுவதோடு,கழிவுகள் அகற்றும் பணிக்கு தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களும் கடமையாற்றுவதாகவும் இந்த நிலையிலே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இவ்வாறான சுகாதார சீர் கேடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளருமான திருமதி யூட் ரதனி அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,

குறித்த பிரச்சினை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உடனடியாக வெளியெறியுள்ள மனிதக்கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.என அவர் தெரிவித்தார்.

நமது நிருபர்





மன்னார் பொது வைத்தியசாலை நோயாளர் விடுதிகளுக்கு செல்லும் பாதையோரங்களில் மலசல கூட கழிவுகள் வெளியேற்றம்-மக்கள் விசனம்- 📷 Reviewed by NEWMANNAR on December 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.