அண்மைய செய்திகள்

recent
-

குருத்துவ வாழ்வில் பொன்விழாக்காணும் அருட்திரு S.J.இம்மானுவேல் அடிகளார்


சர்வதே அரங்கில் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக
உரத்துக் குரல் கொடுத்து ஓயாது இயங்கிவரும் அருட்திரு S.J.இம்மானுவேல் அடிகளார் குருத்துவ வாழ்வில் பொன்விழாக் காண்கிறார்.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த குருக்களில் ஒருவரும் யாழ் மறைமாவட்டத்தின் முன்னாள் குருமுதல்வரும் யாழ் புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான அருட்தந்தை எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார் தனது குருத்து வாழ்வில் 50 வருடங்களை (1966 - 2016) நிறைவுசெய்து இவ்வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி பொன்விழாக் காண்கிறார்.

 தற்போது ஜேர்மன் நாட்டில் இருந்துகொண்டு இறை பணியையும் தமிழ் மக்களின் உரிமைக்கான பணியையும் அடிகளார் முன்னெடுத்து வருகின்றார். சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்து ஓயாது இயங்கிவரும் அருட்திரு. எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரை வாழ்த்துவோம். அவருடைய நற்பணிகளுக்காக அவருக்கும் இறைவனுக்கும் நன்றி கூறுவோம்.

  இன்று இலங்கையில் குறிப்பாக தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றும் பெரும்பாலான குருக்கள் இவரிடம் இறையியல் கற்றும்ää இவருடைய உருவாக்கத்தில் பயிற்சிபெற்றும் வெளிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்;த இறையியல் அறிஞராகத் திகழும் அடிகளார் ஆசிய இறையியலாளர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகின்றார்.
  1934ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியைக் கற்றார். பின்னர் 1958இல் கொழும்பில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று விஞ்ஞானப் பட்டதாரியாக வெளியேறினார். தனது பட்டப்படிப்புக்குப் பின்னர் குருத்துவ வாழ்வைத் தேர்வுசெய்யும்முன் சில காலம் ஆசிரியராகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றினார். பின்னர் உரோமையில் உள்ள ஊர்பானியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும் இறையியல் கல்வியை கற்று 1966ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி உரோமையில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

  குருவாகி நாடு திரும்பிய அவர் சில ஆண்டுகள் யாழ் மறைமாவட்டத்தில் பணியாற்றினார். பின்னர் 1976ஆம் ஆண்டு மீண்டும் உரோமை சென்ற அவர் தனது உயர் கல்வியைக் கற்று இறையியலில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். நாடு திரும்பிய அவர் கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியில் 1976 – 1986 வரை இறையியல் விரிவுரையாளராகவும் இறையியல் பீடத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் யாழ்ப்பாணம் திரும்பிய அவர் 10 வருடங்களாக யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார். 1997வரை அவர் யாழ் மறைமாவட்டத்தின் குருமுதல்வராகவும் பணியாற்றினார்.
 1995இல் யாழ் குடாநாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து திரும்பக் கைப்பற்றும் இலங்கை அரசபடைகளின் படைநகர்வு நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய ஐந்து இலட்சம் மக்களோடு இவரும் வெளியேறி வன்னியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தார். 1997இல் அவர் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறவேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் புகலிடம் தேடினார். இங்கிலாந்தில் ஒரு வருடம் பணியாற்றியபின் ஜேர்மன் நாட்டிற்குச் சென்றார். முன்ஸ்ரர் மறைமாவட்டத்தில் சமயப் பணியாற்றிக்கொண்டு ஈழத்தமிழரின் உரிமைகளுக்கான பணியையும்; சர்வதேச அரங்கில் முன்னெடுத்தார்.
  தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் குறித்து சர்வதேசத்தின் மனச்சாட்சியை உலுக்கியவராக பேசியும் எழுதியும் வந்த அடிகளார் 2010ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். இன்று 82 வயதிலும் அவர் துடிப்புள்ள ஓர் குருவாக இன்றும் மக்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
  இவர் எழுதிய பல ஆங்கில மற்றும் தமிழ் நூல்களில் தனது சிந்;தனைகளை தெளிவாக முன்வைத்துள்ளார். தமி;ழ் மக்களின் போராட்டத்திற்கான நியாயங்கள்ää திருச்சபையின் பங்களிப்பு இலங்கை அரசாங்கத்தின் கடினப்போக்கு போன்ற விடயங்களை விரிவாக ஆராய்ந்துள்ளார்.

  மனச்சாட்சிக்கு ஏற்ப உண்மைகளை உரக்கச் சொல்லும் அவர் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் எனவும்ää இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானவர் என்றும் முத்திரை குத்தப்பட்டார். அவர் என்றுமே யாருக்குமே ஆதரவாளராகவோ எதிரானவராகவோ இருந்ததில்லை. உண்மைக்கும் நீதிக்கும் ஏற்பவே அவர் பேசினார் எழுதினார் செயலாற்றினார். அது அவரை சிலருக்கு ஆதரவானவராகவும் சிலருக்கு எதிரானவராகவும் இனங்காட்டியது.
  தனிப்பட்ட முறையில் அவர் ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காக குறிப்பாக மலையகப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் உதவி வருகின்றார். இவருடைய உதவியினால் பல மலையகப் பிள்ளைகள் கல்வி கற்று இன்று வளமான வாழ்;க்கையை அமைத்துள்ளனர்.

  அண்மைக் காலங்களில் அவர் வழங்கிய செய்திகளில் நேர்காணல்களில் இன்றைய சமகாலச் சூழ்நிலையில் தனது நிலைப்பாட்டையும்ää உலகத்தமிழர் பேரவையின் நிலைப்பாட்டையும் தெளிவாக்கியுள்ளார். இன்றைய போருக்குப் பின்னரான யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தலைவர்களோடு இணைந்து செயலாற்றவேண்டும் எனக் கூறும் இவர் இன்றைய இலங்கையின் அரசாங்கத்திற்கு ‘விமர்சன ஒத்துழைப்பை’(Critical Collaboration) வழங்குவதாகவும் குறிப்பிடுகின்றார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகச் செயலாற்றும் அமைப்புக்களிடையே ஒற்றுமை நிலவவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றார்.
  இவ்வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி தனது குருத்துவப் பொன்விழா நாளில் இவர் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கின்றார்.
  ஒரு பிரமாணிக்கமுள்ள கத்தோலிக்க குருவாகää இனப்பற்றுமிக்க ஈழத்தமிழ்க் குடிமகனாகää மனச்சாட்சியுள்ள ஒரு உலகக் குடிமகனாக  நின்றுகொண்டே அவர் தனது கருத்துக்களைத் தெரிவிக்கின்றார். பணிகளை முன்னெடுக்கின்றார். இயேசுக்கிறிஸ்துவில் அவர் கொண்ட ஆழமான விசுவாசமே அவரை இப்பணிகளில் உந்தித்தள்ளுகிறது.
  முதிர்ந்த வயதிலும் நோயின் பிடியிலும் உள்ளத்து உறுதி தளராதுää எம் மக்களின் உரிமைக்காகக் கண்டங்கள் கடந்து பயணம் செய்தும்ää ஓயாது பேசியும் எழுதியும் வரும் அடிகளாரை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள்  சார்பாக வாழ்த்துகின்றோம்.
சிறப்பாக அவரிடம் இறையியல் கல்வி பயின்றும்ää குருத்துவ உருவாக்கம் பெற்றும் குருக்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் கத்தோலிக்க குருக்கள் சார்பாகவும் அடிகளாரை வாழ்த்துகின்றோம். 

ஈழத்தமிழர் உரிமை வரலாற்றில் அடிகளாரின் பணி என்னென்றும் நினைவுகூரப்படும்.
-அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்-

குருத்துவ வாழ்வில் பொன்விழாக்காணும் அருட்திரு S.J.இம்மானுவேல் அடிகளார் Reviewed by Author on December 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.