அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு முதலமைச்சர் ஜனாதிபதியோடு பேசவேண்டும்: இல்லையேல் வங்கிக் கடனால் உயிரைவிட நேரிடும்- விவசாயிகள் கண்ணீர்


வடமாகாணத்தில் மானாவாரி மற்றும் பெரிய, சிறிய குளங்களை நம்பி மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற் செய்கையில், சுமார் 28 ஆயிரத்து 802.5 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 100 வீதம் அழிவடைந்துள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வமைச்சின் தகவலின் படி,

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகி ய வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 28 ஆயிரத்து 802.5 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 100 வீதம் அழிவடைந்துள்ளது.

இதேளை, 22 ஆயிரத்து 875 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 75 வீதம் அழிவடைந்துள்ளது.

32 ஆயிரத்து 302.5 ஏக்கர் நிலத்தில் செ ய்யப்பட்ட நெற்செய்கை 50 வீதம் அழிவடைந்துள்ளது, 10 ஆயிரத்து 65 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 25 வீதம் அழிவடைந்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இரு மாவட்டங்களிலும் 100 வீதம் நெற்செய்கை அழிவு அதிகமாக காணப்படுகின்றது.

வடக்கின் 5 மாவட்டங்களிலும் மேற்படி அழிவுகளினால் 33 ஆயிரத்து 184 விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

உப உணவு பயிர்செய்கையிலும் பாரிய அழிவு உண்டாகியுள்ளது. இதன்படி 5 மாவட்டங்களிலும் சுமார் 1488.75 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட உப உ ணவு பயிர்செய்கை அழிவடைந்துள்ளது.

இதனால் சுமார் 10 ஆயிரத்து 60 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பருவமழை பொய்ப்பினால் பல லட்சம் ரூபா ய் பணத்தை இழந்திருக்கும் தமக்கு நஷ்டஈடு வழங்கும் விடயத்தில் மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் மௌனமாக இருந்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள் விவசாயிகள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈட்டினை பெற்று கொடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஜனாதிபதியுடன் பேசவேண்டும்.

அவ்வாறு உடனடியாக நஷ்டஈடு வழங்கப்படாவிட்டால் வடமாகாணத்தில் பெருமளவு விவசாயிகள் விவசாய நடவடி க்கைகளுக்காக தனியாரிடமிருந்தும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் விவசாயத்தை கைவிடும் நிலைக்கும், உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கு முதலமைச்சர் ஜனாதிபதியோடு பேசவேண்டும்: இல்லையேல் வங்கிக் கடனால் உயிரைவிட நேரிடும்- விவசாயிகள் கண்ணீர் Reviewed by Author on January 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.