அண்மைய செய்திகள்

recent
-

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது : 69 வருடம் பூர்த்தியாகியும் எம் மக்கள் நிலை ?

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு மக்கள் தமக்கு சொந்தமான காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி எம்மிடம் மீள கையளிக்குமாறு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வட முதல்வர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எமது மக்கள், அவர்களது உரிமைகளுக்காக அவர்களே போராடவேண்டியுள்ளது.

மேலும் இந்த மக்களின் போராட்ட உண்மைகளை வெளியே எடுத்துச் சொல்லவேண்டும். தொடர்ந்தும் அவ்வாறு செய்திகள் வெளிச்செல்வதினாலே இந்த பிரச்சினையை இலகுவில் தீர்க்கமுடியும் என்று நம்புகின்றேன்.

குறிப்பாக கடந்த முறை முல்லைத்தீவில் இராணுவத்தினருடன் பொதுமக்கள் தொடர்புபட்ட பிரச்சினைகள் உண்மையில் ஜனாதிபதிக்கு சரியாக தெரியாது.

எனவே இந்த மக்களின் போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கும் அதே வேளை இவ்விடயத்தை ஜனாதிபதிக்கு உடன் தெரியப்படுத்தவுள்ளேன்.


மேலும் பொதுமக்களின் பூர்வீகநிலங்களை பெற்றுக் கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த பிரச்சினை தொடர்பில் இராணுவத்தினருடன் கலந்துரையாடுவதற்கு, வடக்கு முதல்வர் விமானப்படை முகாமிற்குள் சென்று ஒரு மணித்தியாலயத்திற்கு மேல் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.


மேலும் குறித்த மக்கள் போராட்டத்தில் திரு மாணிக்கம் கணேஷ் திடீர் சுகயீனம் காரணமாக நோய் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு மாஞ்சோலையில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது : 69 வருடம் பூர்த்தியாகியும் எம் மக்கள் நிலை ? Reviewed by NEWMANNAR on February 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.