அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதியின் சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்! - விக்கி


ஜனாதிபதியின் சில தீர்மானங்கள்  நன்மையுள்ளவையாக இருப்பினும் அவற்றின் நடைமுறை பூனையைக் கொண்டு பாலைப் பாதுகாக்க வைப்பது போன்றே  உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் ஊழியர்களுக்கான தினம் ஒன்றினை பிரகடனப்படுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்.பண்ணை, உதவி உள்@ராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இவ்வளவு காலமும் திணைக்களங்களில், அலுவலகங்களில் அந்தந்த திணைக்கள மற்றும் அலுவலக தலைவர்கள் மேற்கொள்ளும் கட்டளைகளுக்கு அமையவே ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் தமது கடமை களை ஆற்ற வேண்டிய ஒரு நிலைப்பாடு காணப்பட்டது.

இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்த ஜனாதிபதி ஒரு வித்தியாசமான கோணத்தில் இப்பிரச்சினைகளை அணுக விரும்பி அதற்கான ஒரு மேடையை சாதாரண அடிமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறானதொரு நிகழ்வை நாட்டிலு ள்ள அனைத்து திணைக்களங்களிலும் சகல அரச நிறுவனங்களிலும் நடத்துமாறு பணிப்புரை ஒன்றை வழங்கியுள்ளார்.

எமக்குக் கிடைத்த அறிவித்தலின் அடிப்படையில், வடமாகாண சபையால் மூன்று பிரிவுகள் பிரிக்கப்பட்டு  பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற விடயங்களைக் கையாள்வதற்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைமை ஆணையாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகம் மற்றும் அவ ர்களின் அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரைக் கொண்ட ஒரு சபையையும், வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விடயங்களுக்கு பிரதிப் பிரதம செயலாளர் நிதி மற்றும் உதவி பிரதிப் பிரதம செயலாளர் நிதி அவர்களைக் கொண்ட ஒரு குழுவும், ஏனைய விடயங்களுக்கு மூன்று பிரதிச் செயலாளர்களைக் கொண்ட ஒரு குழுவுமாகச் சேர்ந்து மூன்று குழுக்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இச் சபைகளில் தமது பிரச்சினைகளை எடுத்துக்கூற இருக்கின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அல்லது கிடைக்கப்பெறாத வேதனங்கள் மற்றும் இடமாற்றம் போன்ற பிறகாரணிகள் பற்றி அந்தந்த குழுக்களிடம் தங்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

 ஜனாதிபதியின் தீர்மானம் நல்லதாக இருப்பினும் அதை நடைமுறைப்படுத்தும் விதம் சிக்கல் மிகுந்ததாகக் காணப்படும் என்றே நம்புகின்றேன். ஒவ்வொரு திணைக்களத்திற்கும் சுதந்திரமான குறைகேள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால் நன்மை பயந்திருக்கும். எனக்கென்னவோ பூனையைக் கொண்டு  பாலைப் பாதுகாக்க வைப்பது போல் இந்த நடைமுறை தென்படுகின்றது.

எனினும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றிய அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகளை ஒத்ததாக அமைந்துள்ளது என்று அறிகின்றேன்.

குறைகேட்கப் போகின்றவர்கள் சுயமாக இயங்கும் வேறு அதிகாரிகள் அல்ல என்பது ஒரு குறையாகவே எனக்குப்படுகின்றது. எனினும் உங்கள் குறைகளை முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தினால் அவர் தன்னாலானதைச் செய்வார் என்ற உறுதிமொழியையும் இச் சந்தர்ப்பத்தில் கூறிவைக்கின்றேன். இத்தருணத்தில் எமது மக்களின் குணாதிசயங்களும் மனதிற்கு எடுக்கப்பட வேண்டும்.

கொஞ்சக் காலத்தில் இன்று தொடங்கப்ப டும் இந்த நடைமுறை கைவிடப்படுமோ என்று யோசிக்கின்றேன். ஏன் என்றால் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், மேலும் வேதனம், கொடுப்பனவுகள், இன்னோரன்ன விடயங்களைக் கவனிக்கும் அதே அலுவலர்களிடமே உத்தியோகத்தர்களைத் தமது குறைகளைக் கூறுங்கள் என்று கூறுகின்றோம்.

இது எந்தளவுக்குப் பயன்அளிக்கும் என்பதை இருந்தே பார்க்க வேண்டும்.  எனினும் இந்தப் பொறிமுறை நல்லாட்சியைப் பேண எடுத்த ஒரு நடவடிக்கையாகவே இதைக் காண்கின்றேன். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நியாயமான நீதியான தீர்மானங்கள் எடுத்தல் போன்ற பலவும் நல்லாட்சியின் அம்சங்கள். அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வடமாகாணம் அவற்றில் முன்னணியில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன் என அவர் மேலும்தெரிவித்தார்.  

                              
ஜனாதிபதியின் சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்! - விக்கி Reviewed by Author on February 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.