அண்மைய செய்திகள்

recent
-

துரையம்மா அன்பகமானது அலுவலக திறப்பு விழாவும் அலுவலகத்தில் சிறிய தையல் தொழிலகம்....முழுமையான படங்கள் இணைப்பு

அன்பகமானது அன்பகத்தின் பத்தாவது ஆண்டு ஆரம்பத்தை முன்னிட்டு இவ்வருடமும் தனது சேவையின் விரிவாக்கமாக தேவன்பிட்டிக்கிராமத்தில் இருந்தும் 23 மாணவர்களை கல்விச்சேவைக்காக உள்வாங்குகின்றது.
 அத்தோடு பெண்களின் சுயதொழில் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் தையல் தொழில் மூலம் பொருளாதாரத்தினை பெற்றுக்கொள்வதற்காக மாந்தை பிரதேசத்தில் பாப்பாமோட்டையில் அமைந்திருக்கும் தனது அன்பக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அலுவலக கட்டடத் திறப்பு விழாவும் அலுவலகத்தில் சிறிய தையல் தொழிலகம் ஒன்றையும் அமைத்து அதன் திறப்பு விழாவினையும் 19-02-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை  10-30 மணியளவில்உத்தியேக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்விற்கு
 
 பிரதமவிருந்தினர்கள்
திரு.ஸ்ரீஸ்கந்தக்குமார் பிரதேசசெயலாளர் மாந்தை மேற்கு
திரு.ஆர்.சண்முகலிங்கம் பிரதிநிதி கிளிநொச்சி மக்கள் அமைப்பு லண்டன்
கௌரவ விருந்தினர்களாக….
 பொறுப்பதிகாரி-பொலிஸ் நிலையம் அடம்பன் மன்னார்
DS.LT.RGRMG  RANKOTGADARA PAPAMOTTAI
 திரு.சி.சிவசங்கர் முகாமையாளர் சிறுவர் நிதியம் வவுனியா
திரு.எம்.றோச்பீரிஸ் இணைப்பாளர் வைக்குறோ நிறுவனம் மன்னார்.
திரு.அ.குணசீலன் அதிபர் மன்.பாப்பாமோட்டை றோ.க.பாடசாலை 
திரு.S.C.M.குருஸ் ஓய்வுபெற்ற கூட்டுறவு அலுவலர் பேசாலை மன்னார்
திரு.டெனிஸ்ரன் டிஷாந்த் கிராமசேவகர் கள்ளியடி மாந்தை மேற்கு 
 வி.மேரி அன்ரனற் கிராமசேவகர் பாப்பாமோட்டை மாந்தை மேற்கு 
கிராமசேவகர் வெள்ளாங்குளம் இவர்களுடன் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் அன்பக உறுப்பினர்கள் மாணவமாணவிகள் பெற்றோர்கள் பொதுநிலையினர் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 

விருந்தினர்கள் சந்தனமாலையணிவித்து வரவேற்பினை தொடர்ந்து தேசியக்கொடியினை மாந்தை பிரதேசசெயலாளர் அவர்கள் ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து அன்பகக்கொடியினை கிளிநொச்சி மக்கள் அமைப்பின் பிரதி நிதி ஏற்றிவைத்ததை தொடர்ந்து மங்களவிளக்கேற்றும் நிகழ்வும் அதனைத்தொடர்ந்து சுமார் 10 தையல் இயந்திர உபகரணத்தொகுதியுடன் சிறிய தையல் தொழிலகம் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இணைந்து திறந்து வைக்க்பட்டது.

கிளிநொச்சி மக்கள் அமைப்பின் பிரதி நிதி திரு.ஆர்.சண்முகலிங்கம்(சக்தி) அவர்கள் தனதுரையில் நான் கிளிஅமைப்பின் பிரதிநிதியாகவும் துரையம்மா அன்பகத்தின் உறுப்பினராகவும் இருப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் எமது அமைப்பில் இருந்து துரையம்மா அன்பகத்தின் தலைவர் வே.மனுவேல்பிள்ளை(உதயன்) வேண்டுகோளுக்கிணங்க ரூபா-500000 இலட்சத்தினை வழங்கியிருந்தோம் அந்த நிதியுடன் அன்பக உறுப்பினர்களும் தங்களின் நிதிப்பங்களிப்போடு இந்த தொழிலகத்தினை அமைத்துள்ளனர் இவர்களின் இந்த முயற்சி சிறந்த முறையில் வெற்றியளிக்க வேண்டும் இவர்களுக்கும் இந்த பாப்பாமோட்டைமக்களின் குறிப்பாக பெண்களின் பொருளாதாரத்தினை உயர்த்தும் வகையில் இன்னும் 90 தையல் இயந்திரங்களை எமது கிளிநொச்சி மக்கள் அமைப்பின் மூலம் வழங்குவேம் அதற்கு மக்களும் துரையம்மா அன்பக உறுப்பினர்களும் சிறந்த முறையில் இயங்க வேண்டும்
வைக்குறோ இணைப்பாளர் அவர்கள் தனது உரையில் பொதுவாக எமது நிறுவனம் பயிற்சிகளை மட்டும்தான் வழங்கி வருகின்றது.ஆனால் துரையம்மா அன்பகமானது பயிற்சி பெற்றுவிட்டு இருக்கின்ற பெண்களுக்கான வேலைவாய்ப்பினையும் பொருளாதாரத்தினையும் உயர்த்தும் நோக்கில் அமைந்திருப்பது பாராட்டுவதுடன் எமது நிறுவனத்தின் மூலம் மேலதிக பயிற்சிகளையும் சந்தைப்படுத்தல் முறையினையும் எம்மால் இயன்றளவு செய்து தருவோம் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய விருந்தினர்கள்  உரiயின் சாரம்சமாக இவ்வாறான அபை;புக்கள் தொடர்ச்சியான சேவைகளை வழங்குவதன் மூலம் எமது மக்களும் மாவட்டமும் முன்னேற்றப்பாதையில் செல்லும் என்பது திண்ணம்.

கிளிமக்கள் அமைப்பு-500000 ரூபாவினையும் தையல் இயந்திரம் மற்றும் அலுவலகம்
சோமசுந்தரம் ரவிந்திரன்-91000ரூபாவினையும்(மின்னிணைப்புக்கும்)
திரு.சக்தி தனது நிதியில் 100000 ரூபாவினையும் நீர் இணைப்புக்கும்
அததோடு துரையம்மா அன்பகத்தின் சேவையை கூர்ந்து கவணித்து மாந்தை பிரதேச செயலாளர் திரு.ஸ்ரீஸ்கந்தக்குமார் பாப்பாமோட்டையில் காணியினை வழங்கியிருந்தார். அவரின் செயல்திறனால்தான் துரையம்மா அன்பகம் இவ்வாறான தொழிலகம் ஒன்றை அமைக்க காரணகர்த்தாவாக இருந்தவர்
அத்துடன் துரையம்மா அன்பகத்தின் வளர்ச்சிப்பாதையில் தங்களது நேரத்தினையும் உதவியனையும் வழங்கி வருகின்ற ஒவ்வொரு உள்ளங்களையும் நன்றியுணர்வுடன் நினைவு கூறினார் அன்பகத்தின் செயலாளர் திருமதி.றொவீனா பொன்ராசா.

அத்துடன் மாலை 3-30மணியளவில் தேவன்பிட்டி பாடசாலை வளாகத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்கள் காலத்தினை வெல்ல கல்வியினை தொடர்ச்சியாக கற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல பிரஜையாக முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் அதற்கு துரையம்மா அன்பகம் கல்விக்கான தனது சேவையினை தொடரும். நிகழ்வு இனிதே நிறைவுற்றது,













































தேவன் பிட்டி பாடசாலையில் துரையம்மா அன்பகம்.........




















































துரையம்மா அன்பகமானது அலுவலக திறப்பு விழாவும் அலுவலகத்தில் சிறிய தையல் தொழிலகம்....முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on February 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.