அண்மைய செய்திகள்

recent
-

வாக்காளர் எண்ணிக்கை: ஆகக் குறைந்த மாவட்டம் எது தெரியுமா?


இலங்கையில் ஆகக்குறைந்த வாக்காளர் எண்ணிக்கை பதிவு திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலில், 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 இலட்சத்து 11 ஆயிரத்து 964 ஆகும்.

2015 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புடன் ஒப்பிடுகையில் இத்தொகை ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 759 ஆல் அதிகரித்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பிற்கு அமைய ஆகக்கூடுதலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 17 இலட்சத்து 50 ஆயிரத்து 310 வாக்களார்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாவது இடத்தில் கொழும்பு மாவட்டம் உள்ளது. அங்கு பதிவுசெய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 43 ஆயிரத்து 713 ஆகும்.

ஆகக்குறைந்த வாக்காளர் எண்ணிக்கை பதிவு திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு இலட்சத்து 68 ஆயிரத்து 96 பேர் அங்கு வாக்காளர்களாக பதிவாகியுள்ளனர்.

வன்னி மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 69 ஆயிரத்து 115 ஆகும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் எண்ணிக்கை: ஆகக் குறைந்த மாவட்டம் எது தெரியுமா? Reviewed by Author on February 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.