அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கில் அரச படைகள் வசமுள்ள நிலப்பரப்புக்கள் விடுவிக்கப்பட வேண்டும். கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்.


வடக்கு கிழக்கில் அரச படைகள் வசமுள்ள நிலப்பரப்புக்கள் விடுவிக்கப்பட வேண்டும். 15.03.2017 அன்று கேப்பாப்பிலவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்.

நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் விஜயம் செய்தார். குறிப்பாக செம்மலை-நாயாறு-கொக்கிளாய்-போன்ற பகுதிகளுக்குச் சென்று மீனவர்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளையும் கேட்டறிந்ததோடு முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வளத்துறை பிரதிப்பணிப்பாளரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். தொடர்ந்து கேப்பாப்புலவு பகுதிக்குச் சென்று அங்கு போராடும் மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இவருடன் மேற்படி இடங்களிற்கு வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ. ரவிகரன் உடன் சென்றிருந்தார். அத்தோடு கேப்பாப்புலவு மக்களுடைய காணி மீட்புத்தொடர்பாக பிரத்தியேகப் பேட்டியினையும் வழங்கியிருந்தார்.

அவை பின்வருமாறு.
கடந்த 15 நாட்களாக கேப்பாப்புலவு மக்கள் தங்களுடைய சொந்த நிலங்களுக்காகவும் தங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வாதாரத்தை உருவாக்கிட கடந்த 15 நாட்களாக அவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த மக்கள் 2008 ம் ஆண்டு யுத்த இடம்பெயர்வுக்கு முன்பு வரை இப்பகுதியிலே குடியிருந்தவர்கள் அதன்பின்பு இடம்பெயர்ந்து சென்றார்கள். அதன்பின்பு இன்றுவiர் அவர்கள் சொந்த உரிமையுள்ள நிலத்தில் வாழ முடியாமல் சொந்த நாட்டில் சொந்த மாவட்டத்தில் சொந்த கிராமத்தில் அகதிகளாக வாழும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். இவர்களுடைய நியாயமான போராட்டம் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் சர்வதேசத்திற்கும் நன்றாகத் தெரியும்.

கேப்பாப்புலவு மக்கள் தாங்கள் வாழ்ந்த சொந்த நிலங்களுக்காக போராடுகிறார்கள். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் மக்களை அணுகி உங்களுடைய நிலங்கள் விடுவிக்கப்படும் அல்லது உங்கள் கோரிக்கை எனன்வென்பதை இந்த அரசாங்கம் கேட்காமல் மௌனம் சாதிப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

இந்த மக்களுடைய நியாயமான போராட்டமானது ஜனாதிபதி பிரதமர் உட்பட அனைவருக்கும் நன்கு தெரியும். அப்படியிருந்தும் எங்களுடைய மக்கள் இந்த போராட்டத்தினை முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந் நிலங்கள் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் ஏராளமான நிலப்பரப்புக்கள் இராணுவ அரச படைகள் வசமுள்ளது. அக்காணிகள் யாவற்றையும் மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கத் தவறின் அம்மக்களை மீண்டும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் அவர்களை அடக்கி ஆளுகின்ற ஒரு வரையறைக்குள் வாழ வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இப்படியான செயல்களை இந்த வடக்கு கிழக்கில் செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக எமது மக்களுடைய கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த மக்களுடைய பூர்வீக நிலங்களை இம்மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.    



வடக்கு கிழக்கில் அரச படைகள் வசமுள்ள நிலப்பரப்புக்கள் விடுவிக்கப்பட வேண்டும். கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன். Reviewed by Author on March 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.