அண்மைய செய்திகள்

recent
-

சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தமிழன்: முரளிதரன் ஸ்பெஷல்



இன்றும் சர்வதேச அளவில் பல சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் என்றால் அவர் இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தான்.

இவரது பந்து வீச்சை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல.

தன்னுடைய திறமையால் இலங்கை அணிக்கு பல வெற்றிகளைத் தேடி தந்தவரும், இன்று சாதனையின் உச்சியில் இருக்கும் முரளிதரன்,சாதரணமாக அந்த உயரத்தை அடையவில்லை.

அவர் மேற்கொண்ட துயரங்கள் பல, ஆனால் அவை அனைத்தையும் வென்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார் முரளிதரன்.

அவர் கடந்து வந்த பாதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு பற்றி பார்ப்போமா...

முத்தையா முரளிதரன் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி சின்னச்சாமி முத்தையா- லட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். முரளிதரன் இலங்கையின் மலையகத் தமிழர் ஆவார்.

முரளிதரன் தன்னுடைய பள்ளிப்படிப்பை அந்தோனியர் கல்லூரியில் தொடர்ந்தார். முரளிதரன் தான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது கிரிக்கெட் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். அதன் பின் அவர் தன்னை ஆரம்பத்தில் ஒரு வேகபந்து வீச்சாளராகவே உருவாக்கினார்.

ஆனால் முரளிதரனுக்கு 14 வயது அடைந்த போது, அவருடைய பயிற்சியாளரான சுனில் பெர்னாண்டோ முரளிதரனை ஒரு ஆப் ஸ்பின்னராக பந்து வீசுவதற்கு பயிற்சி அளித்துள்ளார்.

அதன் பின் பள்ளி தொடர்பான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு 1990-91 ஆம் ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி Bata வின் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய விடா முயற்சி மற்றும் திறமையால் இலங்கை A அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது 5 போட்டிகளில் விளையாடிய முரளிதரனால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.

இதனால் மீண்டும் மீண்டும் பயிற்சி மேற்கொண்டு தன் திறமையை பயிற்சி ஆட்டங்களில் நிரூபித்து 1992 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்டார்.

தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். சிறப்பாக செயற்பட்டு வந்த முரளிக்கு பல சோதனைகள் அடுத்தடுத்து காத்திருந்தன.

முரளியின் கிரிக்கெட் வரலாற்றில் Boxing Day என கருதப்படும் நாள் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் திகதி. அன்றைய தினம்தான் முரளிதரன் பந்து வீசிய போது நடுவராக கடமையாற்றிய டெரல் ஹெயார் அவர் பந்தை எறிகிறார் Chuck Ball என்று கூறி குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியின் மீது மீண்டும் Chuck Ball லில் சிக்கியது. இதனால் அவர் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக முரளி உயிரியல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனடிப்படையில் அவர் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்து வீசுகிறார் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் மகிழ்ச்சியுடன் விளையாடி வந்த முரளிதரனுக்கு 1998 மற்றும் 1999 காலக்கட்டங்களில் மீண்டும் முறையற்ற முறையில் பந்து வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது இலங்கை அணியின் தலைவராக இருந்த அர்ஜூன்ரணதுங்கா முரளிதரனுக்காக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அவர் போட்டியை இடையில் நிறுத்தி சென்றார். அதன் பின் நடந்த சமரசத்தின் பின்னரே அப்போட்டி நடைபெற்றது.

இவ்வாறு பல சோதனைகளை சந்தித்து வந்த முரளிதரன் 2004 ஆண்டு தன்னுடைய 500 வது விக்கெட்டை வீழ்த்தினார்.

அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியினால் சிறப்பாக செயல்பட்ட முரளி பல அரிய சாதனைகளையும் நிலைநாட்டி விட்டுதான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்துக்கொண்டார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னும் யாரும் எட்டமுடியாத அளவிற்கு தான் தன்னுடைய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முரளிதரன்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தமிழன்: முரளிதரன் ஸ்பெஷல் Reviewed by Author on March 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.