அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு-📸

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
-மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும்,குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் பிரபாகணேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பிரதேசச் செயலாளர்கள்,பொலிஸ்,கடற்படை உயர் அதிகாரிகள், திணைக்களத்தலைவர்கள், அரச,அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள்,விவசாய,மீன்பிடி அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.தோடு தீர்வுகளும் முன் வைக்கப்பட்டது.

மேலும் கடந்த காலங்களிலே மன்னார் மாவட்டத்தில் மண் அகழ்வில் இடம் பெற்ற முறைக்கேடுகள் குறித்து ஆராயப்பட்டதோடு எதிர்காலத்தில் அவ்வாறு இடம் பெறாத வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் பாதை அபிவிருத்திக்கு கிரவல் மண் அகழ்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த வருடம் 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டு அனைத்து பணவும் செலவழிக்கப்பட்டுள்ளமை குறித்து தெழிவூட்டப்பட்டது.

மேலும் வீடமைப்பு,பாதை,மின்சாரம்,மற்று ம் அடிப்படை வசதிகள்,வாழ்வாதார திட்டங்கள், அங்கவீனமானவர்களுக்கான கொடுப்பணவு,மற்றும் சமூர்த்தி கொடுப்பணவு தொடர்பாக இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதியதியின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வறுமையை ஒழிக்கின்ற திட்டங்கள்,நடமாடும் சேவை,போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரத்தில் அழகிய சந்தைக்கட்டிடத்தொகுதி,அரச,தனி யார் போக்குவரத்துச் சேவைக்கான பஸ்தரிப்பிடம் போன்றவற்றை 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திட்டமிட்டு அமைப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

-மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள்,பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு,பிரதேசச் செயலாளர்களினூடாக குறித்த பிரச்சினைகளுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதே வேளை மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் அங்கு சென்றிருந்த போதும் ஊடகவியலாளர்கள் உரிய முறையில் தமது கடமைகளை செய்ய முடியாத நிலை காணப்பட்டதோடு தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்-(3-3-2017)

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக 4000 மில்லியன் ரூபாய் செலவு-2016
 http://www.newmannar.lk/2017/03/dccm-4000ml.2016.html










மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு-📸 Reviewed by NEWMANNAR on March 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.