அண்மைய செய்திகள்

recent
-

கால அவகாசம் எதற்கு..? தமிழரசு கட்சி அரசாங்கத்தை பாதுகாக்கின்றது : சுரேஸ்பிரேமசந்திரன் குற்றச்சாட்டு

ஐ.நாவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என கூறும் இலங்கைக்கு மேலும் 2 வருடங்கள் கால அவகாசத்தை வழங்குவதில் என்ன நியாயம் உள்ளது? என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவம் பெற்றிருக்கும் தமிழரசு கட்சியினர் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஜெனீவா அமர்வு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த மீளவும் இலங்கை அரசாங்கத்திற்கு 2 வருடங்கள் கால அவகாசம் வழங்கி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் இலங்கை சுதந்திர கட்சி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் சில அமைச்சர்கள் இணைந்து சர்வதேச விசாரணை தீர்மானத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம்.

இலங்கையில் போர்குற்றம் நடக்கவில்லை. சர்வதேச விசாரணை தேவையில்லை. சர்வதேச விசாரணை நடந்தால் மீண்டும் யுத்தம் நடக்கும் என பல கருத்துக்களை கூறுகின்றார்கள்.

எனவே நாம் கேட்கிறோம் விசாரணை நடக்காது என்றால் பொறுப்பு கூறல் என்பது நடக்கவே நடக்காது. அதேபோல் சர்வதேச விசாரணை நடந்தால் சிங்கள மக்கள் குழப்பமடைவார்கள்.

எனவே பாதிக்கப்பட்ட மக்கள் நீங்கள் அமைதியாக இருங்கள் என்பதாகவே அதன் அர்த்தம் உள்ளது. இவ்வாறான நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கானதாகவே இருக்கின்றது.

மற்றபடி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி பெற்று கொடுப்பதற்கானது அல்ல. தமிழரசு கட்சி அரசாங்கத்தை பாதுகாக்க நினைக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையக தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என தமிழரசு கட்சி குறிப்பாக இரா.சம்மந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூறியிருக்கின்றனர்.

ஆனால் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் 2 வருடங்கள் கால அவகாசத்தை வழங்குவதன் ஊடாக தமிழரசு கட்சி எதனை சாதிக்கப்போகின்றது?.

ஆயுதப்போராட்டம் நிறைவடைந்திருக்கின்றது. இராஜதந்திர போராட்டத்தை நடத்தி வருகின்றோம் என கூறிக்கொண்டிருப்பவர்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும், ஜீ.எஸ்.பி வரி சலுவை உள்ளிட்ட சலுகைகளை அரசாங்கத்திற்கு பெற்று கொடுப்பதற்கே நினைக்கின்றார்கள்.



கால அவகாசம் எதற்கு..? தமிழரசு கட்சி அரசாங்கத்தை பாதுகாக்கின்றது : சுரேஸ்பிரேமசந்திரன் குற்றச்சாட்டு Reviewed by NEWMANNAR on March 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.