அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் போராட்டங்களை கண்டு கொள்ளாத அரசாங்கம் சுவிஸ் தூதரிடம் வடக்கு முதல்வர் தெரிவிப்பு...


வடக்கில் மக்களுடைய உரிமை போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் அது தொடர்பில் ஒன்றும் நடக்காதது போன்று மத்திய அரசு மௌனமாக இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மக்களுடைய போராட்டங்களுக்கு ஜனாதிபதியோ அல்லது முக்கிய அமைச்சர்களோ உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் எனவும் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான சுவிற்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஹைன்ஸ் வால்கர் நெடேர்கூர்னிடம் எடுத்து கூறியுள் ளார்.

யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரது வாசஸ்தலத்தில் நேற்று பிற்பகல் 5 மணியளவில் சுவிஸ் தூதுவருக்கும் வடக்கு முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டவை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நாயாறு, கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் அண்மையில், 250க்கு மேலான சிங்கள மீன்பிடியாளர்கள் அத்து மீறிய மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு மீன்படி அமைச்சின் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் மக்களிடையே மேலும் மேலும் பிரச்சினைகளை அதிகரிக்க கூடியது என சுட்டிக்காட்டியிருந்தேன்.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, போன்ற இடங்களில் தமது உறவினர்கள் எங்கே என்றும், தமது காணிகளை விடுவிக்குமாறும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அது சம்பந்தமாக மத்திய அரசாங்கம் கரிசனைகளை காட்டாமல் இருக்கின்றது. இது தொடர்பில் தான் அறிந்துள்ளதாக தூதுவர் கூறியிருந்தார். பொதுவாக வடக்கு மாகாணத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையைதான் தூதுவர் கேட்டார்.

அதற்கு நான், மக்கள் தமது உரிமைகளை பெறுவதற்கு ஒரு உற்சாகத்தை பெற்றுள்ளனர். தமது உரிமைகளுக்காக போராட ஆரம்பித்துள்ளார்கள். இதுவரை காலமும் அவர்களை அடக்கி வைத்திருந்தார்கள். தற்போது ஜனநாயக சூழல் என்பதால் அவர்கள் தமது உரிமைகளை போராட்டத்தின் மூலம் பெற ஆரம்பித்துள்ளார்கள்.

இது ஒரு நல்ல சமிக்ஞையாக இருந்தாலும் அரசாங்கம் அதற்குரிய போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கின்றது. ஒருமாத காலமாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அரசு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கோரியிருந்தேன். இவை தொடர்பில்தான் அரசாங்கத்துடன் பேசுவதாக தூதுவர் கூறியிருந்தார்.

எங்களை பொறுத்தவரையில் மற்றைய மாகாண முதலமைச்சர்களோடு நானும் அரசோடு பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். வடக்கில் நடப்பது தெற்கில் உள்ளவர்களுக்கு தெரிவதில்லை எனவும் அவர் கூறியிருந்தார். அவர்களுக்கு வடக்கில் உள்ளவர்களின் கருத்துக்கள் சென்றடைய வேண்டும் எனவும், அதற்கு ஏற்றது போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

எனினும் மக்களுடைய போராட்டங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்பதே எனது கோரி க்கையாக இருந்தது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.  

மக்களின் போராட்டங்களை கண்டு கொள்ளாத அரசாங்கம் சுவிஸ் தூதரிடம் வடக்கு முதல்வர் தெரிவிப்பு... Reviewed by Author on March 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.