அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களுக்கான உரிமைகளை வழங்க மறுதலிப்பது ஆபத்தானது - ஐங்கரநேசன்


இந்த மண்ணில் தமிழர்களுக்கான உரிமைகள் மீண்டும் மறுக்கப்படுமாக இருந்தால் மீண்டும் இந்த மண் இரத்த களரியை எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கும் தள்ளப்படலாம் என வடக்கு மாகாண விவ சாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவில் நேற்றைய தினம் நடைபெற்ற அம்பலவாணர் கலையரங்க திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலமும் நேரிலும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இன்றைய தினம் (நேற்று) பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கு வது தொடர்பில் கலந்துரை யாடுவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் என தெரிவிக்கப்பட்ட ஒருவர் ஒரு கட்சி அமைப்பாளரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சரிடம் எதுவும் கலந்துரையாடப்படவில்லை. இது தான் இன்றைய நிலைமை, எங்களை பொறுத்தவரையில் கடந்த ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

இன்றைய ஆட்சியாளர்களை நல்லாட்சி என்று நாங்களே கூறி மக்களிடம் தவ றான அபிப்பிராயத்தை நாங் களே உருவாக்கியுள்ளோம்.  எங்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
பிரச்சினைகள் இந்த மண்ணில் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யாரும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம். ஆனால் அரசாங்கம் இதனை நினைக்கவில்லை. எங்களுக்கு உதவி  செய்து எங்கள் உரிமை களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என எண்ணுகின்றது.
எங்களுக்கான தேவைகளை நாங்களே நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் போது மீண்டும் கடந்த கால சம்பவங்கள் நிகழலாம்.

அண்மையில் போரால் பாதிக்கப்பட்ட வீடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது அவர்களது பேரப்பிள்ளை கள் அழகாக இருந்தார்கள். அதனை நானும் கூறினேன்  உங்கள் பேரப்பிள்ளைகள் அழகானவர்கள் என.
அப்போது அவர்கள் அழகானவர்கள் மட்டுமல்ல போராளிகள் என அந்த வயோதிபர்கள் என்னிடம் கூறினார்கள்.

ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள் என நான் கேட்டேன். அதற்கு நாங்கள் கிறிஸ்தவர்கள். மறுபிறப்பு பற்றி நம் பிக்கை இல்லை. ஆனால் இந்த சிறுவயதிலும் இவர்கள் ஆனையிறவு பற்றி பேசுகின்றார்கள். பலாலிக்கு போக வேண்டும் என கூறுகின்றார்கள். 

நாங்கள் வன்னியில் இருந்தோம். வதைபட்டோம்.  ஏதாவது ஒரு போராளியின் மறுபிறப்பாக கூட இந்தக் குழந்தைகள் இருக்கலாம். இந்துக்களாகிய நீங்கள் தான் இது தொடர்பில் கூற வேண்டும் என்றார்கள்.
இவ்வாறு பல குழந்தைகள் இருக்கலாம். அந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகும் போது இந்த மண்ணில் எங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுமாக இருந்தால் மீண்டும் இந்த மண் இரத்த களரியை சந்திக்கும் துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கும் தள்ளப்படலாம்.

இதனால்தான் எங்களை எங்கள் விருப்பப்படி வாழவிடுமாறு கோருகின்றோம். ஆனால் அது முடியாது போல் உள்ளது. கடந்த மூன்று மாதகாலமாக எமது கூட்டுறவு துறைக்கு ஆணையாளர் ஒருவர் இல்லை. அவரை நியமிக்க கூட எமக்கு அதிகாரமில்லை. எமது  மக்களுக்கு உதவி செய்வதற்கும் அதிகாரம் இல்லை. இதுதான் இன்றைய ஆட்சி நிலை என அமைச்சர் ஐங்கரநேசன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கான உரிமைகளை வழங்க மறுதலிப்பது ஆபத்தானது - ஐங்கரநேசன் Reviewed by Author on April 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.