அண்மைய செய்திகள்

recent
-

உலகின் முதல்முறையாக உல்லாசக்கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track)


தற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து மக்களை வியக்க வைத்துள்ளனர். அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த ‘நார்வீஜியன் க்ரூஸ் லைன்ஸ்' என்ற சொகுசுக் கப்பல் இயக்கும் நிறுவனத்தினரால் இந்த ஆடம்பர கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீன சந்தைக்காக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலுக்கு ‘நார்வீஜியன் ஜாய்' என பெயரிட்டுள்ளனர்.இந்தக்கப்பலின் மேல்தளங்களில் இரண்டு அடுக்கு பந்தய தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பந்தய தடம் உலகின் தலைசிறந்த பெராரி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு அடுக்கு பந்தய தடத்தில் 10 எலெக்ட்ரிக் கோ-கார்ட் கார்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்பது விஷேட அம்சமாகும்.

ஜெர்மனியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ‘மேயர் வெர்ப்ட்' என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தினரால் இந்த கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

நார்வீஜியன் ஜாய் கப்பலில் மொத்தம் 3,850 பயணிகள் பயணிக்கலாம். ஜெர்மனியில் இருந்து ஷாங்காய் நோக்கி வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி இந்த கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.









உலகின் முதல்முறையாக உல்லாசக்கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) Reviewed by Author on April 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.