அண்மைய செய்திகள்

recent
-

உலகில் ஓர் அதிசயம்....நிலங்களை பிரசவிக்கும் கடல்....


பல்வேறு காரணங்களினால் நிலங்கள் கடல் நீரினால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. எனினும், அதற்கு நேர்மாறாக கடலில் இருந்து நிலங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

சுவிடன் மற்றும் பின்லாந்துக்கு இடைப்பட்ட பொத்னியா வளைகுடா பகுதியில் இந்த நிகழ்வு ஆண்டு தோறும் இடம்பெறுகின்றது. குறித்த பகுதியில் அதிகளவான தீவுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், ஆண்டு தோறும் 10 மி.மீ அளவிலான நிலப்பகுதி கடலில் இருந்து வெளிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த செயற்பாட்டை அறிவியல் ரீதியில் "Rapid Glacio - Isostatic Uplift" என கூறுவார்கள்.


குறித்த பகுதில் இறுதியாக முடிந்த "பனி காலத்தின்" (ice age) போது பாரிய பனி மலை ஒன்று இருந்ததாக சொல்லப்படுகின்றது. எனினும். அதிக சுமை காரணமாக அந்த பனி மலை கடலுக்குள் மூழ்கிப் போனது.

காலப்போக்கில் அந்த பனி மலை உருகி பாரம் குறைந்த நிலையில், மூழ்கிய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலை விட்டு வெளிவரத் தொடங்கியுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவான நிலம் வெளிவருகின்றது.

இது 150 கால்ப்பந்து மைதானத்திற்கு ஒப்பானது என சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக ஆண்டு தோறும் குறித்த பகுதியானது வரை படத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படகு மூலம் பயணம் செய்த நிலையில் தற்போது கால்நடையாக பயணம் செய்கின்றனர்.

அத்துடன், கடலில் இருந்து வெளிவரும் நிலப்பகுதியானது சிறிது காலத்திலேயே புல் முளைத்து, பின்னர் செடி கொடிகள், மற்றும் மரங்களும் வளரத்தொடங்குகின்றன.


முன்னொரு காலத்தில் குறித்த பகுதி முழுவதும் பனி காலங்களில் உறைந்து காணப்பட்டதாகவும், காலப் போக்கில் பருவ நிலை மாற்றம் காரணமாகவும், அதிகரித்த கப்பல் போக்குவரத்து காரணமாகவும், கடல் உறைந்து போவது நின்று போய்விட்டது.

இதனையடுத்து தீவிற்கு தீவு அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் படகு மூலம் பயணம் மேற்கொண்டனர். எனினும், தற்போது நடந்தே பயணம் மேற்கொள்கின்றனர்.

காரணம் அந்த பகுதியில் புதிதாக தோன்றிய நிலப்பகுதி, தீவுகளை ஒன்றாக இணைந்து விட்டது. இந்த நிலை இப்படியே நீடித்தால் இன்னும் 2500 ஆண்டுகளில் கடல் நடுவே இயற்கை பாலமாக குறித்த தீவுகள் மாறிவிடும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகில் ஓர் அதிசயம்....நிலங்களை பிரசவிக்கும் கடல்.... Reviewed by Author on April 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.