அண்மைய செய்திகள்

recent
-

பிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி! வடக்கு முதல்வர் அழைப்பு....


வேலை வாய்ப்பின்றி இன்று கஷ்டத்தில் வாடும் பட்டதாரிகள் பலர் அடுத்த பிரதேசபை தேர்தலில் முன்னின்று வெல்ல வேண்டும் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
பட்டதாரிகளின் அறிவு எமது பிரதேச மக்களுக்கு அத்தியாவசியம் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளார்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி மாத விழா  நெல்லியடி நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்று போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு செயற்படுகின்ற அடிமட்ட திணைக் களங்களில் உள்ளுராட்சி மன்றங்கள் முதன்மை வாய்ந்தவை. பொது மக்கள் பல்வேறு தரப்பட்ட சேவை களை நோக்கி பிரதேசசபைகளுக்கு வருகை தருகின்றார்கள்.

அவர்களின் தேவைகள் முடிந்தளவு ஒரே தினத்தில் அல்லது இரண்டாவது தடவையிலாவது நிறைவேற்றப்பட வேண்டும். மாறாக ஒரு சிறிய அனுமதிக்காக பல தடவைகள் பொதுமக்கள் அலைக் கழிக்கப்படுவதும் ஈற்றில் அனுமதி மறுக்கப்படுவதும் சபை நடவடிக்கைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் ஆவன. இவ்வாறான தாமதங்களும் அலைக்கழிப்புக்களும் தவிர்க்கப்பட வேண்டும்.

பிரதேசசபைகளின் செயற்பாடுகள் பற்றி நாம் ஆராய்ந்து பார்ப்போமேயாயின் பொது மக்களின் தேவைகளில் அரைப்பங்கு விடயங்கள் பிரதேசசபைகளின் ஊடாக தீர்க்கப்படக்கூடியவை. அந்த வகையில் சுற்றுச் சுகாதாரத்தைப் பேணுதல், முறையான கழிவகற்றல்கள், வீடுகள், கட்டடங்களை பிரமாண ஒழுங்கில் அமைத்தல், இது போன்ற பல விடயங்களுக்கான அனுமதிகள் பிரதேச சபைகளினாலேயே வழங்கப்படுகின்றது.

பல பிரதேச சபைகள் தமக்கு இருக்கக் கூடிய அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளை வழங்காதிருப்பது வேதனைக்குரியது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பேரவா எங்கள் அலுவலர்கள் மனதில் குடிகொண்டு விட்டதென்றால் எம்மால் ஆகாதது ஒன்றில்லை.

பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றால் புரிதலும் வலுத்திறனும் கொண்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம். இன்றைய சூழலில் பலவிதமான தகைமைகள் எமது பிரதேசசபை அங் கத்தவர்களுக்குத் தேவைப்படுவதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். வேலை வாய்ப்பின்றி இன்று கஷ்டத்தில் வாடும் பட்டதாரிகள் பலர் அடுத்த பிரதேசபை தேர்தலில் முன்னின்று வெல்ல வேண்டும். அவர்களின் அறிவு எமது பிரதேச மக்களுக்கு அத்தியாவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

அரசியல் கட்சிகள் தேர்வின் போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களும் ஊழல்களை ஒழித்து உத்தமமான ஒழுங்குபட்ட பிரதேச சபைகளை நிறுவ முன்வர வேண்டும். சென்ற காலங்களில் ஊழல்கள் பல தலைவிரித்தாடி வந்தன. நாம் அவற்றைக் குறைத்து அகற்ற எம்மால் ஆனவற்றைச் செய்து வருகின்றோம்.

அதே நேரம் அரச அலுவலர்கள் அதிகாரிகளாக, அதிகாரம் செலுத்துபவர்களாக இல்லாமல் சாதாரண குடிமக்களுக்கு சேவையாற்றக்கூடிய சிறந்த சேவையாளர்களாக தம்மை மாற்றுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.                  

பிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி! வடக்கு முதல்வர் அழைப்பு.... Reviewed by Author on May 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.