அண்மைய செய்திகள்

recent
-

கிம் ஜோங் உன் புதிய உத்தரவு... தீவிரமடையும் அமெரிக்கா- வடகொரியா பிரச்சனை....


வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன்னின் புதிய உத்தரவால் அமெரிக்கா- வடகொரியா இடையேயான பிரச்சனை இன்னும் தீவிரமடைந்துள்ளது.

வடகொரியா மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களை மற்றும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கொரிய தீபகற்பத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்க இராணுவத்தின் வலிமையை நிரூபிக்கும் வகையில் தீபகற்பத்தின் மீது குண்டுவீச்சு விமானங்களை பறக்கவிட்டுள்ளது.

ஆனால் வடகொரியா, அமெரிக்கா விமானத்தை சமாளிக்க ஒரு திட்டத்தை தீட்டியுள்ளது.

அவற்றை வானிலே சுட்டு வீழ்த்தி வெளியேற்ற ஆயுதத்தை தயார் செய்துள்ளது.

இதற்காக, வட கொரியா தேசிய பாதுகாப்பு விஞ்ஞான அகாடமி ஏற்பாடு செய்த ஒரு புதிய வகை விமான எதிர்ப்பு ஆயுத சோதனையை பார்வையிட்ட கிம் ஜோங் உன்,குறித்த ஆயுதத்தை அதிகளவில் தயாரித்து நாடு முழுவதும் குவிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால், அமெரிக்கா- வடகொரியா இடையேயான பிரச்சனை இன்னும் தீவிரமடைந்துள்ளது.

கிம் ஜோங் உன் புதிய உத்தரவு... தீவிரமடையும் அமெரிக்கா- வடகொரியா பிரச்சனை.... Reviewed by Author on May 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.