அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உயிலங்குளத்தில் படுகொலை இடம் பெற்ற இடத்தில் சுடர் ஏற்றி படு கொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தார் எம்.கே.சிவாஜிலிங்கம்-(படம்)


அன்றைய கால கட்டத்தில் உயிலங்குளம் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் மோற்கொண்ட கன்னி வெடித்தாக்குதலின் போது இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியூடாக மன்னார் நோக்கி வந்த பேரூந்தின் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த பேரூந்தின் நடத்துனரான சிங்கள மகனான வில்லியம் உற்பட தமிழ் மக்கள் 34 பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 6 ஆம்; நாள் நிகழ்வு இன்று புதன் கிழமை மதியம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இறுதி யுத்ததின் போது முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்தும், உயிலங்குளம் வீதியூடாக பேரூந்தில் மன்னார் நோக்கி பயணம் செய்த மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரையோகத்தில் கொல்லப்பட்ட 34 பொது மக்களையும் நினைவு கூர்ந்து வடமாகாண சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் உணர்வு பூர்வமாக அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

-மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம்-முருங்கன் 11 ஆம் கட்டை சந்தியில் இன்று புதன் கிழமை மதியம் 1 மணியளவில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் வருகை தந்த குழுவினர் குறித் வீதியில் படுகொலை இடம் பெற்ற இடத்தில் சுடர் ஏற்றி,மாலை தூவி அஞ்சலி செலுத்தினர்.

-அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,

தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையின் போது சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித்தமிழ் மக்கள் படு கொலை செய்யப்பட்ட நினைவேந்தல் வாரம் மே மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 18 வரை தமிழர் தாயகப்பகுதிகளில் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

-அந்த வகையில் நினைவேந்தல் வாரத்தின் 6 ஆவது நாளான இன்று புதன் கிழமை மன்னார் மாவட்டம் உயிலங்குளம் பகுதியில் இடம் பெற்ற படு கொலையினை நினைவு கூர்ந்துள்ளோம்.

அன்றைய கால கட்டத்தில் உயிலங்குளம் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் மோற்கொண்ட கன்னி வெடித்தாக்குதலின் போது இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியூடாக பொது மக்கள் பயணம் செய்த பஸ்ஸினை வழி மறித்த இராணுவத்தினர் பேரூந்தில் பயணம் செய்த மக்களை சுட்டுக்கொலை செய்ய எத்தனித்தனர்.

-எனினும் குறித்த பஸ்ஸின் நடத்துனராக இருந்த சிங்கள மகள் அமரர் வில்லியம் அவர்கள் மக்களை கொலை செய்ய முயற்சி செய்த இராணுவத்திடம் குறித்த பேரூந்தில் பயணிக்கின்ற மக்கள் அப்பாவி மக்கள் என்றும் அவர்கள் மீது எதவும் செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

எனினும் மக்களை நோக்கி சுட முற்பட்ட போது மக்களை சுடுவதாக இருந்தால் முதலில் நடத்தனரான என்னை சுட்டுக்கொண்று விட்ட பின்பு தான் தமிழ் மக்கள் மீது கை வைக்க முடியும் என்று கூறினார்.
-அதன் போது சிங்கள படைகளினால் குறித்த பஸ்ஸின் நடத்துனரான சிங்கள மகன் அமரர் வில்லியம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்த குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகளான 34 பொது மக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

சுடப்பட்ட போது உயிர் தப்பிய ஒருவர் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

-இவ்வாறு சுட்டு படு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில் இன்று புதன் கிழமை இப்பகுதியில் உள்ள வீதி அருகிலே அதாவது பயணித்த 34 பொதுமக்களும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த இடத்திலே நினைவேந்தல் வாரத்தின் 6 ஆவது நாளை அனுஸ்ரிக்கின்றோம்.

-படு கொலை செய்யப்பட்ட அத்தனை மக்களுக்கும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுவதோடு அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.

மேலும் குறித்த பேரூந்தின் சாரதியான சிங்கள மகன் அமரர் வில்லியத்திற்கும் நாங்கள் தலை சாய்த்து அவருக்கும் அஞ்சலியை செலுத்துகின்றோம்.

நடத்துனர் அமரர் வில்லியத்தின் படுகொலையினை தொடர்ந்து அவரது மகன் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டதும் வரலாறு.

உயிலங்குளம் போரூந்து தரிப்பிட படுகொலை போன்று மன்னார் மாவட்டத்தில் பல்வேறு படுகொலைகள் இடம் பெற்றுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
-இந்த வகையில் ஒட்டு மொத்தமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மாத்திரமல்ல மலையகம் மற்றும் இலங்கை முழுவதுமாக படு கொலை செய்யப்பட்ட அத்தனை உறவுகளையும் நாங்கள் நினைவு கூறுகின்றோம்.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.








மன்னார் உயிலங்குளத்தில் படுகொலை இடம் பெற்ற இடத்தில் சுடர் ஏற்றி படு கொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தார் எம்.கே.சிவாஜிலிங்கம்-(படம்) Reviewed by NEWMANNAR on May 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.