அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஜீவபுரத்தில் குடிகொண்டிருக்கும் தூய பத்திமா அன்னையின் ஆலயத்திருவிழா...படங்கள் இணைப்பு

அன்னையின் ஆலயத்திருவிழா இன்று 13-05-2017 காலை 7-00 மணியளவில்  எழுத்தூர் பங்குத்தந்தை அருட்பணி ஜேசுரஜா அவர்களின் தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை  அவர்களின் முன்னிலையில் அருட் தந்தை ஒல்மன் அருட்தந்தை வசந்தன் அருட்தந்தை நேருகுருஸ் அவர்களும் இணைந்து கூட்டுத்திருப்பலியாக சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

  புனித பாத்திமா அன்னையின் 100 வது  காட்சி  தந்தஆண்டாக(1917-2017) இவ்வாண்டு அனுஸ்ரிக்கப்படுகின்றது தூய பாத்திமா அன்னை என்ற பெயர், போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா நகரில் 1917 மே 13 முதல் 1917 அக்டோபர் 13 வரை லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற மூன்று சிறாருக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த காட்சிகளில் சிறப்பு வாய்ந்ததாக பாத்திமா நகர் காட்சியும் விளங்குகிறது. இரண்டாம் உலகப் போர், ரஷ்ய நாட்டின் மனமாற்றம் ஆகியவை பற்றி பாத்திமா அன்னை வழங்கிய முன்னறிவிப்புகள் அப்படியே பலித்ததால், பாத்திமா காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது.பாத்திமா அன்னையின் திருவிழா மே 13ந்தேதி கொண்டாடப்படுகிறது,

 தொடர்ச்சியாக அந்த 03 சிறார்களுக்கும் 06 மாதமும் 13ம்  திகதி 06 தடவை காட்சிகொடுத்து தொடர்ச்சியாக செபியுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார் .அன்னையின் 06றாவது காட்சிகொடுக்கும் போது அங்கு 70000 மக்கள் கூடியிருக்கும் போது வெளிப்படுத்திய  விசேட காட்சியாக அன்னையின் மூன்று காட்சிகள்
  • சூரியன் நடனமாடும் காட்சி
  • இயேசுகிறிஸ்த்துவின் காட்சி
  • புனித ஜோசப்பின் காட்சி
மூலம் அன்னையானவளின் அன்பு கருணை நம்பிக்கை யின் மூலம் தொடர்ச்சியாக செபிக்கவேண்டும் என்பது வெளிப்பாடு...
மன்னார் மறைமாவட்டப்பங்கின் தேவ அழைத்தலுக்கு குடும்பத்தில் இருந்து ஒரு  பிள்ளையையாவது பிள்ளைகளை தயார்படுத்துவோம் 
புனித பாத்திமா அன்னையின் 100 வது  ஆண்டு காட்சி  தந்த விழா  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
 













































மன்னார் ஜீவபுரத்தில் குடிகொண்டிருக்கும் தூய பத்திமா அன்னையின் ஆலயத்திருவிழா...படங்கள் இணைப்பு Reviewed by Author on May 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.