அண்மைய செய்திகள்

recent
-

ஒரே ஒரு வினாடியில்.. உலகப் பிரச்சனை சரியாகிவிடும்! விண்வெளியில் ஆச்சரிய எரிகல்...


விண்வெளியில் சுற்றி வரும் குறிப்பிட்ட எரிகல் ஒன்றை பூமிக்கு கொண்டு வந்தால் சில வினாடிகளில் உலகப் பொருளாதார பிரச்சனைகள் அனைத்து தீர்ந்து விடும் என நாசா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் லட்சக்கணக்கான எரிகற்கள் சுற்றி வருவது நாம் அனைவரும் அறிந்த ஓர் விடயம்.

பூமியின் மையப்பகுதியில் இரும்பு, வெள்ளி, வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட உலோகங்கள் புதைந்துள்ளது போல் விண்வெளியில் சுற்றி வரும் எரிகற்களிலும் ஏராளமான உலோகங்கள் புதைந்துள்ளன.

இந்த எரிகற்களில் ஒன்று தான் Psyche எனப் பெயரிடப்பட்ட எரிகல். சுமார் 200 கி.மீ நீளமுள்ள இந்த எரிகல்லில் கற்பனையில் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு வைரம், பிளாட்டினம், இரும்பு, வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் புதைந்துள்ளன.

இந்த ஒட்டுமொத்த உலோகத்தின் மதிப்பை எண்ணில் கணக்கிட முடியாது. உதாரணத்திற்கு, மனித குல வரலாற்றில் இதுவரை பூமியில் தோண்டி எடுக்கப்பட்ட பிளாட்டினத்தின் அளவானது விண்வெளியில் உள்ள 500 மீற்றர் நீளமுள்ள எரிகல்லில் கிடைக்கும் பிளாட்டினத்தின் அளவு மிக அதிகளவில் இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள 200 கி.மீ நீளமுள்ள ஏரிகல்லை பூமிக்கு கொண்டு வந்தால், உலக நாடுகள் அனைத்திலும் உள்ள பொருளாதார சிக்கல் அனைத்தையும் ஒரு வினாடியில் தீர்த்து விடலாம்.

விலைமதிப்பற்ற இந்த எரிகல்லை பூமிக்கு கொண்டு வருவற்கு அல்லது எரிகல்லை அடைந்து அங்கேயே உலோகங்களை வெட்டி எடுக்க தற்போது நாசா திட்டமிட்டு வருகிறது.

இந்த எரிகல்லை அடைவதற்கான பயணம் எதிர்வரும் 2022 ஆண்டு தொடங்கப்படும். 4 ஆண்டுகள் பயணத்திற்கு பின்னர் 2026-ம் ஆண்டில் அந்த எரிகல்லை விஞ்ஞானிகள் அனுப்பிய விண்கலம் அடையும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரே ஒரு வினாடியில்.. உலகப் பிரச்சனை சரியாகிவிடும்! விண்வெளியில் ஆச்சரிய எரிகல்... Reviewed by Author on May 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.