அண்மைய செய்திகள்

recent
-

3000 ஆண்டுகள் பழமையான செயற்கை கால் கண்டுபிடிப்பு....


எகிப்தில் பிரமிடுகளை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கல்லறை ஒன்றில் இருந்து செயற்கை கால் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்தில் Sheikh ‘Abd el-Qurna கல்லறையை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புக்கு சாட்சியாகியுள்ளனர்.

3000 ஆண்டுகள் பழமையான குறித்த கல்லறையில் இருந்து மரத்தாலான செயற்கை கால் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த காலானது மதகுரு ஒருவரது மகள் பயன்படுத்தி வந்தது எனவும், அவரது வாழ்நாளில் குறித்த செயற்கை காலானாது பலமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் மனித உடம்பில் உறுப்புகளின் முக்கியத்துவத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித குலம் உணர்ந்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக இந்த செயற்கை கால் அமைந்துள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த செயற்கை காலானது மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது. அதில் தோலினாலான வாரினால் கட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளனர். தற்போது எகிப்திய நிபுணர்கள் குறித்த செயற்கை காலினை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

3000 ஆண்டுகள் பழமையான செயற்கை கால் கண்டுபிடிப்பு.... Reviewed by Author on June 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.