அண்மைய செய்திகள்

recent
-

வட - கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியப்படாது சமஷ்டியும் கிடையாது என்கிறார் மனோ கணேசன்...


இலங்கை மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சமஷ்டி அரசியலமைப்பாக வரவேண்டும் என்பது சரி. இந்த விடயங்கள் நடக்காது. அதுவே உண்மையும் கூட. இந்த யதார்த்தத்தின் பங்காளியாகவே கூட்டமைப்பும் இருந்து கொண்டிருக்கிறதென அமைச்சர் மனோ கணேசன் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலை   பலவீனமாக இருக்கின்றது. எனவே இருப்பதனை வாங்கிக் கொண்டு ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண் டும் என அவர் மேலும் தெரிவிக்கையில்,

முழுப் பாராளுமன்றமுமே இப்போது அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டிருக்கிறது. 21 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவை அமைத்திருக்கிறோம். அதன் தலைவர், பிரதமர் அவர்கள நானும் அதில் அங்கத்தவ ராக இருக்கிறேன். எல்லாக் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள். 
இன்னும் இரண்டு வாரத்தில் தொகுப்பை நாங்கள் பாராளுமன்றத்திற்கு கொடுக்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பதற்கான சாத்தியமில்லை. அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனது நிலைப்பாடு என்னவென்றால் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும்.
அதில் ஒன்று இலங்கை அரசியல் அமைப்பு சமஷ்ரி அமைப்பாக வரவேண்டும்.
இரண்டு, மூன்றாவது இலங்கை அரசியல் அமைப்பிலே மதம் சம்பந்தமான சரத்து மாற்றப்பட்டு மத சார்பற்ற நாடாக இந்தியா வைப்போல இலங்கையை அறிவிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாக இருக்கிறது.

சமஷ்டி, மதசார்பின்மை வட-கிழக்கு இணைப்பு என்ற மூன்றும் அங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது எனது கொள்கை. ஆனால் நடைமுறை அப்படி அல்ல. அந்த மூன்று நடப்பதற்கான சாத்தியமில்லை. அந்த யதார்த்தத்தின் ஒரு பங்காளியாகத்தான் கூட்டமைப்பினர் இருக்கின்றனர். அதற்காக கூட்டமைப்பினரையோ சம்பந்தனையோ குறை சொல்லவில்லை. 

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தனும் முழு முயற்சியுடனேயே செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.
யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலை பலவீனமாக இருக்கின்றது. எனவே, இருப்பதை வாங்கிக்கொண்டு ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வட - கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியப்படாது சமஷ்டியும் கிடையாது என்கிறார் மனோ கணேசன்... Reviewed by Author on June 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.